ஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல்

ஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல்
நற்செய்தியிலிருந்து ஒரு படம்
சாபர் இயக்கியும் நற்செய்தி கலர் பாக்கெட் புத்தகம்

பகிர்ந்துகொள்ளல் சுவிசேஷத்தை எளிதாக்குகிறது!

வேதாகமத்தின் சுருக்க வருணனைகளை கிறிஸ்தவ சுவிசேஷ செய்தி கற்பித்தலுக்கு ஏற்றவாறு பின்வரும் ஒலியுடன் கூடிய காட்சிப் பொருட்களை GRN தயாரித்துள்ளது

இந்த கட்டுரை இந்த வளங்களை பல்வேறு வழிகளில் எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி ஒரு அறிமுகம் கொடுக்கிறது 1.வயதுவந்தோர்க்கான ஊழியம்

  உதாரணங்கள்

  பின்வரும் சூழ்நிலைக் காட்சிகள், நமது சாதனங்கள், ஆரம்பநிலை நற்செய்திப்பணியிலும், அடிப்படையான சீஷத்துவப்படுத்துதலிலும் எவ்வாறு பயன்படுத்தபடலாம் என்பதற்கான உதாரணங்களாகும். (தொடர்ந்து 'அவர்' என்ற ஆண்பால் உரிச்சொல்லே பயன்படுத்தப்படுவதை கவனியுங்கள். ஆனால் நற்செய்தியாளர், பிரசங்கம் செய்பவர் அல்லது கதை சொல்பவர் ஒரு பெண்ணாகவும் இருக்கலாம்.)

  காட்சி 1. "எல்லாம் ஒரே நேரத்தில்"

  ஒருவர் நின்று கொண்டு எல்லோரும் பார்க்கும்படி படங்களை பிடித்துக்கொண்டு, சரியான நேரத்தில் படைப்பு பக்கங்களை திருப்பிக்கொண்டிருக்க (பக்கம் திருப்புவது ஒரு வித்தியாசமான ஒலியினால் பதிவில் காட்டப்படும்) ஒலிப்பதிவு தடம் நேரடியாக தொடர்ந்து இயக்கப்படுகிறது (மக்கள் கவனித்து கேட்பதற்கு விருப்பமாயிருக்கும்வரை).

  இந்த முறைக்கு எந்த பயிற்சியோ அல்லது ஆயத்தமோ தேவையில்லை. இது ஒரு தனி மனிதருக்கோ, ஒரு குடும்ப குழுவிற்கோ, கடைத்தெருவிலோ அல்லது ஆலயத்திலோ எங்கு மக்கள் கூடி கவனித்து கேட்க கூடிய எந்த இடத்திலும் பயன்படுத்தப்படலாம்.

  நற்செய்தியாளர் ஒலிப்பதிவுச் செய்தியின் பிரதிகளையோ சில பாடப் புத்தகங்களையோ அதைக் கேட்பவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு பார்ப்பதற்கு வசதியாக அவர்களிடம் விட்டு செல்லலாம். திருப்பி போட்டு பார்க்கக்கூடிய கருவியைக் கூட அவர்களிடம் விட்டு செல்லலாம். கட்டாயமாக அவர் திரும்பி வந்து, மக்கள் எப்படி தொடருகிறார்கள் அதைப் புரிந்து கொள்கிறார்களா, இயேசுவின் சீடர்களாக விரும்புகிறார்களா, அவர்களுக்கு இன்னும் கூடுதல் விபரங்கள் அல்லது போதனைகள் தேவைப்படுமா? என்பவற்றை கண்டறிவார்கள்.

  காட்சி 2. "வரிசைப்படுத்தப்பட்டது"

  நற்செய்தியாளர் தனது நிகழ்ச்சியை "வரிசைப்படுத்த" முன்கூட்டியே திட்டமிடுகிறார். எங்கே இயல்பான நிறுத்தங்கள் வரவேண்டும் என்பதை முடிவு செய்து ( உதாரணமாக, ஒவ்வொரு படத்துக்கும் பிறகா அல்லது ஒரு தொகுதி படங்களுக்கு பிறகா) அதற்கேற்றவாறு திருப்பி நிறுத்துகிறார். பிறகு தன்னால் இயன்றால் அருகே கேட்டு கொண்டிருந்தவர்களிடம் கலந்துரையாடுவார். அவர்கள் புரிந்துகொள்ளும் தரத்தை மதிப்பிட சில கேள்விகளை தயாரிக்கலாம். சில கதைகளை மீண்டும் சொல்லலாம். கூட்டத்தில் ஒருவரை தான் சொன்ன கதையை திருப்பி சொல்லுமாறு கேட்கலாம். பிறகு தானே ஒரு சிறு 'பிரசங்கம்' அல்லது சொந்தமாக ஒரு செய்தியையோ அல்லது இயக்கப்பட்ட அதே பகுதியை மீண்டும் மீண்டும் பலமுறை பின்னணியை போட்டும் காட்டலாம்.

  இந்த சூழ்நிலையில், நற்செய்தியாளர் மறுநாளோ அல்லது ஒரு வாரத்திற்கு பிறகோ வந்து செய்தியை தொடரலாம். வரிசைப்படுத்தப்பட்ட தன் நிகழ்ச்சிகளை அவர் வீடு வீடாகவோ, திருச் சபையின் உறுப்பினர்கள் வீடுகளுக்கோ, கிராமம் கிராமமாகவோ கொண்டு செல்லலாம்.

  காட்சி 3. "கலந்துரையாடும் முறை"

  நற்செய்தியாளர் தனக்கு சரியானதாக தோன்றுகிற எந்த நேரத்திலும் பதிவை நிறுத்தி விட்டு மக்களோடு சேர்ந்து கலந்துரையாடலாம்.

  காட்சி 4. "பதிவுகள் இல்லாமல்"

  நற்செய்தியாளர் நல்ல வேதாகம அறிவும் பயிற்சியும் உடையவரானால், அவர் பதிவு செய்திகள் இல்லாமலேயே படங்களை பயன்படுத்தலாம். மேலும் அதனூடே கதைகளையும் சொல்லலாம். எந்த நேரத்திலும் நிறுத்தி மக்களோடு கலந்துரையாடி, அதற்கு பின்னர் சரியான நேரம்வரையில் தொடர்ந்து நடத்தலாம்.

  காட்சி 5. "பெருந்திரள் கூட்டங்கள்"

  இந்த சாதனங்கள் (செய்திகள்) திறந்தவெளி நற்செய்திப் பணியிலும் சந்தை வெளிகளிலும் பயன்படுத்தப்படலாம். விரிவாக்க கூடிய ஒலிபெருக்கி கருவிகளும் பெரிய வேதாகம படங்கள் அடங்கிய அட்டைகளும் தேவைப்படலாம். மேலே சொன்ன ஏதாவது ஒரு சூழல் காட்சி இந்தப் பின்னணியில் பயன்படுத்தப்படலாம்.

  போதிப்பதற்கும் நற்செய்தி பணிக்கும் ஒலிப்பதிவை பயன்படுத்துதல்

  உபகரண பொருட்களை தயார் படுத்துதல்

  உங்களுக்கு தேவைப்படும் ஒலிப்பதிவுகளை முன்னதாகவே கேட்டு விண்ணப்பியுங்கள்.

  உங்கள் பின்னணி கருவியை நன்கு சோதித்து பாருங்கள் (பொதுவாக இயக்கம், ஒலியின் அளவு, பேட்டரிகள்/மின்சாரம்).

  ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ள தரத்தையும் மற்றும் செய்திகளின் தெளிவையும் உள்ளடக்கத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா என்பதை சோதித்து பாருங்கள்.

  உங்களை ஆயத்தப்படுத்தி கொள்ளுங்கள்

  இந்த ஒலிப்பதிவை கேட்கப்போகிறவர்களுக்காக ஜெபியுங்கள்.

  மற்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சியை வழங்குவதற்க்கு முன் சரியான செய்தியை தேர்ந்தெடுங்கள்.

  நீங்கள் அதை முதலில் கேட்டு பாருங்கள்.

  உங்களால் முடியுமானால் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டுள்ள வேத பகுதியை படித்து பாருங்கள்.அதில் கூறப்பட்டுள்ளதை குறித்து யோசித்து அதற்கு தேவைப்படும் பொருள் பற்றி கூடுதலான குறிப்புகளையோ அல்லது புத்தகங்களையோ பாருங்கள்.

  கேட்பதற்கான கேள்விகளையும், கூடுதல் உதாரணக் கதைகளையும் அல்லது சொல்லக்கூடிய விளக்கங்களையும் விவாதிக்கபடுதற்குரிய குறிப்புகளையும் தயாரித்து கொள்ளுங்கள்.

  முக்கியமானது: இந்த நிகழ்ச்சி அதனளவிலேயே அப்படியே பயன்படுத்தப்படலாம். சோம்பலாக இருந்து விடாதீர்கள். நல்ல ஆயத்தம் அதன் பலனை பலமடங்கு பெருக்கும்.

  உங்களால் சரி செய்ய முடியாத தொழில்நுட்ப பிரச்சனை ஏற்படின் நீங்கள் GRN ஐத்தான் அறிவுரைக்கு அணுக வேண்டும்.

  ஊழியத்தை ஆயத்தப்படுத்துங்கள்

  உங்கள் நிகழ்ச்சியை திட்டமிடுங்கள்:

  1. மக்கள் வசதியாக கேட்கக்கூடிய சரியான நேரத்தை முடிவெடுங்கள்.
  2. குறுக்கீடுகள் வராத ஒரு நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
  3. பின்னணி கருவிகள், ஒலிபெருக்கி கருவிகள் மற்றும் படங்கள் இவைகளுக்கேற்ற ஒரு சிறந்த இடத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
  4. மக்கள் முழுமையாக ஈடுபட்டு கேட்பதற்கு ஏற்ற வகையில் அவர்கள் உட்காருமிடத்தை திட்டமிடுங்கள்.

  அவர்களை ஈடுபாடு கொள்ள செய்வது எப்படி என்பதை சிந்தியுங்கள்.செய்தியை கேட்டு உற்சாகமாக வருபவர்களுக்கு உதவ ஆயத்தப்படுங்கள். கிறிஸ்துவினிடத்தில் அவர்களை வழிநடத்தவும், இன்னொரு வாய்ப்புக்கு அழைக்கவும், ஒரு குறுந்தகடு சீடி அல்லது ஒலிநாடாவோ தந்து அவர்களை வழிநடத்துங்கள்.

  பயிற்சி செய்க! கற்றுக்கொள்வதற்கு சிறந்த வழி செய்துபார்ப்பதே! ஒரு பதிவு செய்தியை குழுக்களோடு பயன்படுத்தும்போது சீக்கிரமாக விளங்காத பகுதிகளை நீங்கள் விளக்குவதற்கும் தகுந்த கேள்விகளை கேட்பதற்கும் தெளிவான பயன்பாடுகளையும் உதாரணங்களையும் கொடுத்து உங்களுக்கே உரிய முறைகளை வளர்த்துக்கொள்ள முடியும்.

  நீங்கள் பயன்படுத்தும் பதிவை குறித்து வைத்து கொள்ளுங்கள்

  நீங்கள் GRN சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவீர்கள் எனில் நீங்கள் பயன்படுத்தும் பதிவுகள், படச்சாதனங்கள், பயன்படுத்தும் இயக்கிகள் இவற்றைப் பற்றின முழு விவரங்களையும் எங்கே பயன்படுத்தப்படுகின்றன என்ற விவரங்களையும் ஒரு பதிவேட்டில் குறித்து வைப்பது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  மேலும் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள "GRN ஒலி ஒளி சாதனவளங்களை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி - பகுதி 2: இன்னும் ஆழமாக செல்லுதல்".

தொடர்புடைய தகவல்கள்

கதைசொல்லல் ஏன்? - காலகாலமாகவே தொடர்பு கொள்ளுவதற்கு கதை சொல்லல் என்பது மிகவும் ஆற்றல் மிக்க ஒரு வழியாக இருந்து வருகிறது.

ஊழியத்தின் செயல்முறை - GRN உலகமெங்கும் உள்ள எல்லா நாடுகளுக்கும் அருட்பணி ஒளிப்பதிவாளர்களைப் பயிற்றுவித்து நியமிக்கிறது.எந்த கிராமமும் அணுக முடியாத தொலைவிலும் இல்லை. எம்மொழியும் புரிந்து கொள்ளவே முடியாததும் இல்லை.

சுவிசேஷத்திற்கும் வேதாகம பாடங்களுக்குமான வள ஆதாரங்கள் - குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்வொர்க் நற்செய்தி பரப்படுவதற்கும் அடிப்படை வேதாகம கற்பித்தலுக்கும் ஆடியோ பொருட்களை பட புத்தகங்கள் மற்றும் கைவிசை ஆடியோ இயக்கிகளுடன் இணைத்து ஆயிரக்கணக்கான மொழிகளில் தயார் செய்கிறது.

GRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.

ஆடியோ மற்றும் ஆடியோ-காட்சி உபகரண பொருட்கள் - எங்களிடம் 6000 க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள பெரிய அளவிலான வள ஆதாரங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றதான குறிப்பாக பேச்சின் வாயிலாக தொடர்பு கொள்பவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

Who would have thought? - Ideas for using GRN resources right where you are