
1. சுவிசேஷத்தின் தேவை
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி நற்செய்தி இன்றி மக்கள் தேவனிடமிருந்து நிரந்தரமாகவே பிரிக்கப்பட்டிருப்பார்கள். விசுவாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் சுவிசேஷம் இரட்சிப்பு உண்டாவதற்கு தேவ பெலனாக இருக்கிறது. (ரோமர் 1;16). மேலும் "கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்." (ரோமர் 10;13). அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. (அப்போஸ்தலர் 4:12)
2. ஆண்டவரையே சார்ந்திருப்பது
ஆண்டவர் மீதுள்ள விசுவாசமும் அவரையே சார்ந்திருப்பதும் எங்களது அருட்பணிக்கு அடிப்படையான மூலப்பொருளாகும். இதுவே எங்களது முதன்மையான உத்தியாக ஒவ்வொரு அருட்பணியையும் செய்வதற்கான பிரார்த்தனையில் எமது அர்ப்பணிப்பின் உறுதி விளங்கப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பணிக்கான உத்தியும் ஜெபத்துடனும் மேலும் தேவனுடைய இராஜியத்தின் மகிமைக்கு இசைவுள்ளதாகவும் இருக்கின்றது. எங்கள் நோக்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள இப்பெரும் சவாலைக் கண்டு நாங்கள் ஒருநாளும் வெட்கம் அடைந்ததில்லை.
3. தேவ செய்தியை கேட்பதின் பலன்
"தேவசெய்தியை கேட்பதினால் வரும் விசுவாசம்" (ரோம் 10:17). எழுத்தறிவு இல்லாத மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் கேட்கும் திறன் ஒன்றே வழியாகிறது. இன்னும் படிக்கத்தெரிந்தவர்கள், தேவ செய்தியை கேட்பவர்கள் முறையான கலாச்சாரத்தின் வழியாக தொடர்பு கொள்பவர்கள் அநேகர் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் ஒரு ஆழ்ந்த விளைவை ஏற்படுத்த கூடும். மக்கள் தேவ செய்தியை கேட்க செய்வதற்கு ஓலிப்பதிவுகள் மிகவும் ஒரு பயனுள்ள வழியாக அமைந்துள்ளது.
4. சிறுபான்மை குழுக்களாக உள்ள மக்களைக்குறித்து அக்கறை
எந்த இனமக்களையும் எந்த மொழிப்பிரிவை சார்ந்தவர்கள் ஆனாலும் அவர்களது எண்ணிக்கை சிறியஅளவு தானே என்று அவர்களை விட்டுவிடுவது GRN இன் செயல்திட்டம் இல்லை. இது முறையான ஆராய்ச்சியில் தெரியவரின் அத்தகைய மக்களும் நற்செய்தியை கேட்கும்படியாக தேவனின் உதவியுடன் அவர்களுக்கு தேவையான ஒலிப்பதிவுகளை தந்து அவர்கள் தேவையை GRN சந்திக்க முயற்சி செய்கின்றது.
5. நன்றியுடன் துதிக்கும் மனப்பாங்கு
வேதத்தில் உள்ளபடி நம் இருதயத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கவும் எல்லா சூழ்நிலையிலும் தேவனுக்கு துதி செலுத்துவோமாக (1 தெ 5.: 16-18). கஷ்டமான சூழ்நிலைகளில் கூட தேவ சந்தோஷத்தை பிரதிபலிப்பது எங்கள் விருப்பமாகும்.