நிதிபற்றிய கொள்கை

நிதிபற்றிய கொள்கை

நிதி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் நிதி எப்படி பெறுகிறோம் அதை எப்படி நிர்வகிக்கப் படுகிறது என்பது உட்பட அனைத்திலும் 222 தேவனை புகழ்ந்து அவர் நாமத்தை மகிமைப் படுத்த மிகவும் வாஞ்சிக்கிறது. தேவனையே தன் நம்பிக்கையாக கொண்டு அவரை நோக்கி ஜெபிக்கும் இருதயம் ஆண்டவருக்கு விலைமதிப்பற்றது என்பதை நாங்கள் மெய்யாகவே விசுவாசிக்கின்றோம். நேர்மையும் பொறுப்பாக நிதி கையாளும் விதம் இந்த இரண்டும் சமமாக மிகவும் முக்கியத்துவமானவைகள்.

ஆண்டவர் எங்களிடம் கொடுத்த இப்பணியை நாங்கள் முற்றும்முடிய நிறைவேற்றுவதற்க்கும் எங்கள் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்பவராக எங்களின் முழு நிதிபொறுப்பையும் ஏற்று நடத்துகிறார் என்று GRN நம்புகின்றது. எங்களது கடமை அவரது தீர்மானத்தின்படி அவரது சித்தத்திற்கு எங்களை முற்றிலும் ஜெபத்தில் ஒப்புக்கொடுத்து மகிழ்வோடு அவர்க்கு எதிர்நோக்கி காத்திருக்கும்போது கர்த்தர்தாமே அவரது சித்தம் நிறைவேறத்தக்கதாக நிதி வசதிகளை அளித்து வழிநடத்தி வருகிறார்.

தேவன்தாமே தம் மக்களைத் தனக்கு தெரிந்து கொண்டு அவர்கள் மூலம் தன் பணியை நிறைவேற்ற அவர்களின் தேவைகளையெல்லாம் சந்தித்து வழங்கிவருகிறார் என்று GRN அறிந்து கொண்டுள்ளது. இவ்வாறு தேவனுடைய பிள்ளைகளோடு அவர்களது கலை இலக்கியம் கூட்டங்கள் மூலமாகவும் தனிப்பட்ட விதத்திலும் தொடர்பு கொண்டு அவர்களுக்கு போதிய அளவு அருட்பணியைப் பற்றியும் இதில் அவர்கள் எவ்வாறு தங்களை உட்படுத்தி பங்கேற்க முடியும் என்று அவர்களுக்கு விரிவாகஎடுத்து சொல்வது எங்கள் முக்கிய கடமையாகும்.

நாங்கள் பரிந்துரைகள் இல்லாமலேயே தகவல்களை வழங்குகின்றோம்.

GRN உபகரணப் பொருட்கள்வழக்கமாக மானிய விலையில் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. சிலவேளைகளில் உதவி மானியம் கிடைக்கின்றது. யாரையும் நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த சுவிஷேத்தை பெற்றுக்கொள்ள தடை செய்யாதபடி இருக்கும்படி விரும்புகிறோம்.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் அறிந்து கொள்ள