GRN பின்பற்றி வருவதுவேர்ல்ட் எவஞ்செலிக்கல் அலையன்ஸ் இன் உலக நம்பிக்கை அறிக்கை.உலக அளவில் நற்செய்திபணி வட்டத்தில் நன்கு மதிக்கப்படும் ஒரு நிறுவனத்துடன் நாங்கள் எங்களை அடையாளம் காட்டுகின்றோம். மேலும் நடைமுறையில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நற்செய்திபணி குழுக்களையும் பிரதிபலிக்கிறோம்.
நாங்கள் நம்புவது
...இந்த பரிசுத்த வேதாகமம்ஆதியில் தேவனால் கொடுக்கப்பட்டது, தெய்வீகமாக ஏவப்பட்டு எழுதப்பட்டது, பிழையில்லாதது, முற்றிலும் நம்பத்தகுந்தது, மேலும் விசுவாசம் ஒழுக்கம் இவைகளைப்பற்றின ஒப்புயர்வற்ற அதிகார வல்லமை கொண்டது...
ஒருவரேகடவுள், நித்தியமாக வெளிப்படுத்துவது மூன்று நபர்களாக பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற விதமாக...
நமதுகர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கடவுள் மாமிசத்தில் வெளிப்பட்டார், அவரது கன்னி பிறப்பு, அவரது பாவமற்ற மனித வாழ்க்கை, அவரது தெய்வீக அற்புதங்கள், அவர் பிறருக்காக தன்னையே பரிகாரியாக மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தது, மீண்டும் உடலோடு உயிர்த்தெழுந்தது, மேலே எடுத்துக்கொள்ளப்பட்டது, மத்தியஸ்தராக இருந்து, மீண்டுமாக மகிமையோடும் வல்லமையோடும் திரும்ப வருகிறார்...
இந்தஇரட்சிப்புகாணாமல்போன பாவியான மனுஷன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்துதலினாலும் கிரியைகளினால் அல்லாமல் விசுவாசத்தினாலும் பரிசுத்த ஆவியானவரால் மீண்டும் புதிதாக உருவாக்கப்படுகிறான்...
இந்தபரிசுத்த ஆவியானவர், விசுவாசிகளின் இருதயத்தில் வாசம் செய்வதன் மூலம் அவர்களை ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழ செய்யவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பணிசெய்யவும் சாட்சியாகவும் வைக்கிறார்...
இந்தபரிசுத்த ஆவியின் ஒருமைப்பாடுஅனைத்து மெய்விசுவாசிகள், திருச்சபை, கிறிஸ்துவின் சரீரமாகுதல்...
இந்தஉயிர்த்தெழுதல்மீட்கப்பட்டவர்கள், வழித்தப்பிபோய் மீட்பை இழந்துபோனவர்கள் இருவருக்கும் ; மீட்கப்பட்டவர்கள் உயிர்தெழுதலின் மூலம் புதிய ஜீவனையும், வழிதப்பியவர்கள் மீளா ஆக்கினைத்தீர்ப்பையும் அடைவார்கள்.