
GRN இந்த ஊழியம் மூன்று பெரும் செயல்முறை பகுதிகளாக உள்ளது : பதிவு செய்தல், விநியோகம் செய்தல் மற்றும் மேம்படுத்துதல்.
ஒலிப்பதிவுச் செயல்முறை
பல நாடுகளைச் சேர்ந்த பதிவாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற திறமையானவர்களை தேர்ந்தெடுத்து, பயிற்சியளித்து, வல்லவர்களாக்கி பணியமர்த்துகிறது. இந்த ஒலிப்பதிவுக் குழுக்கள் முக்கியமான மொழிக்குழுக்களை அடையாளம் காணுகின்றது.பின், ஊழியப் பங்குதாரர்களோடு கலந்து ஆலோசித்து தகுதியான பாடங்களையும் உள்ளடக்கங்களையும் அடையாளம் கண்டு உயர்தரமான ஆடியோ மற்றும் ஆடியோக்காட்சி நிரல்களையும் தாய்மொழிப் பேச்சாளர்களையும் அந்தந்த கலாச்சாரத்துக்கு பொருத்தமான பணிகளைப் பயன்படுத்தி உருவாக்குகின்றனர். நமது நிகழ்ச்சிகள் முதன்மையாக இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை வேதாகமக் கதைகளாக சொல்லுவதன் வாயிலாக ஆற்றல்மிக்க முறையிலும் எளிமையாகவும் எடுத்துரைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது. வேதாகமக் கதைகளுக்கு சுருக்கமான விளக்கங்களைத் தந்து மக்களை ஈடுபாடு கொள்ள அழைக்கின்றது. மக்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகவும் அவரது திருச்சபையின் மக்களாகச் செய்வதே எங்கள் குறிக்கோளாகும்.ஒருபோதும் எழுதவேபடாத மொழிகளிலும் அம்மொழி குழுவில் உள்ள படிக்க மற்றும் எழுத அறியாத மக்களின் மொழிகளை பதிவு செய்வதற்கான ஒலிப்பதிவு நுட்பங்களை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம். துல்லியமான தகல்வல்களை உறுதி படுத்த சரிபார்க்குதல் முக்கியம்.
எந்த பழங்குடியினர் மக்களும் சிறியவர்கள் அல்ல எந்த கிராமமும் அணுக முடியாத மிகத் தொலைவிலுள்ளதும் அல்ல. ஒவ்வொருவரும் அவரவர் உள்ளத்துக்குகந்த இருதய மொழியில் நற்செய்தியைக் கேட்பதற்கு தகுதிவுடையவர்களே. ஏனெனில்," விசுவாசம் நற்செய்தியைக் கேட்பதன் மூலம் வரும்." (ரோமர் 10:17)
விநியோகச் செயல்முறை
எங்கள் நிகழ்ச்சிகளை எங்களால் இயன்ற அளவு பரவலாகக் கிடைக்கக் கூடியதாக செய்வதையே எங்கள் குறிக்கோளாக கொண்டிருக்கிறோம். இவைகள் உலகமெங்குமுள்ள எங்களுடைய 40 க்கும் மேற்ப்பட்ட செயல்பாட்டு இடங்களில் இருந்தும் எங்கள் வலைத்தளங்களில் இருந்தும் இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடியதாக கிடைக்கின்றது. எங்கள் சொந்த குழுக்களுக்கும், மற்றும் பல மிஷனரிகள், சுவிசேஷகர்கள் மற்றும் தேவாலயங்கள் நாட்டுபவர்களும் எங்களது ஆதாரப் பொருட்களை அணுகி பயன்படுத்துகின்றனர். மேலும் சர்வதேச பங்காளர்கள் எங்களது பணிப்பொருட்களை பரந்த அளவில் இணையம், மைக்ரோ எஸ்டி கார்ட்ஸ் மற்றும் பிற ஊடகங்கள் மூலமாக கிடைக்கும்படி செய்துள்ளனர். மொபைல் போனின் உபயோகத்திற்காக சிறப்பான ஒலி பின்னணிஇயக்கி சாதனங்களையும் அதற்கான பயன்பாடுகளையும் அளித்து வருகின்றோம். r
மேம்படுத்தல் செயல்முறை
தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக GRN இன் அருட்பணியை பலரும் அறியுமாறு பரவலாக்க விரும்புகிறோம். இதனால் மக்கள் பணியாலர்களாகவோ தன்னார்வத் தொண்டர்களாகவோ, பிரார்த்தனை ஜெபம், பொருளுதவி, தனிப்பட்ட ஈடுபாடு முதலியவற்றின் மூலமாக இப்பணியில் ஈடுபடுவதை வரவேற்கின்றோம்.