GRN ஐ பற்றி

GRN கிறிஸ்தவ நற்செய்தி மற்றும் சீடத்துவம் தொடர்பான ஒலி மற்றும் காட்சி சாதனங்களை உலகத்தின் மிகக் குறைவாகவே சந்திக்கப்பட்டுள்ள மொழிக் குழுவினருக்கு வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் இல்லாத இடங்கள் மற்றும் மக்கள் செல்லக்கூடிய உள்ளூர் தேவாலயங்கள் சபைகள் இல்லாத இடங்கள் அல்லது எழுதப்பட்ட வேதமோ வேதப்பகுதிகளோ கிடைத்தாலும் அவற்றைப் படிக்கவோ புரிந்துகொள்ளவோ கூடிய மக்கள் ஒருசிலரே இருக்கும் இடங்கள், இப்படிப்பட்ட இடங்களில் பணியாற்றுவதே எங்களுக்கு பேரார்வம். .

நற்செய்திப் பணியில் ஒலி மற்றும் காட்சி சாதனங்கள் மிகவும் ஆற்றல் மிக்க ஊடகங்கள் ஆகும். ஏனெனில் வாய்வழிச் செய்தியை கேட்டு கற்று கொள்வோருக்கு மிகவும் ஏற்றதாக நற்செய்தியை கதை வடிவில் அவை எடுத்துரைக்கின்றது. எங்களது ஒலிப்பதிவுகள் எங்கள் வலைத்தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து குறுந்தகடுகலாகவோ(CD), மின்னஞ்சல் வழியாகவோ, ப்ளுடூத் மற்றும் இதர ஊடகங்கள் மூலமாகவோ விநியோகிக்கப்படலாம்.

நாங்கள் 1939 இல் தொடங்கிய காலம் முதல் இதுவரை கிட்டத்தட்ட 6,000 மொழிகளில் அதாவது வாரத்துக்கு 1 மொழிக்கு மேல்! இவற்றுள் பெரும்பாலானவை உலகத்திலேயே மிகக் குறைவாக சந்திக்கப்பட்ட மொழிக்குழுக்களாம்.

  • GRN உலகமெங்கும் உள்ள எல்லா நாடுகளுக்கும் அருட்பணி ஒளிப்பதிவாளர்களைப் பயிற்றுவித்து நியமிக்கிறது.எந்த கிராமமும் அணுக முடியாத தொலைவிலும் இல்லை. எம்மொழியும் புரிந்து கொள்ளவே முடியாததும் இல்லை.

  • மொழியினால் கலச்ச்சாரத்தினால் வேறுபட்ட மக்களுக்கு குறிப்பாக சிறிய தனிமைப்படுத்தப்பட்ட ஆதாரவளம் குன்றினவர்களுக்கும் தேவனுடைய சத்தியத்தை தெளிவாகவும் பிழையின்றி துல்லியமாக அறிவிப்பதை GRN தங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

  • ஒரு ஒற்றை ஸ்பானிஷ் பதிவைக் குறித்து தேவன் கொடுத்த தரிசனம் இன்று 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் 6,000 மொழிகளில் ஒரு பெரிய அருட்பணி நெட்ஒர்க்ஆக வளர்ந்துள்ளது. இவைஎல்லாம் எப்படி தொடங்கியது என்பது பற்றி படியுங்கள்.

  • GRN works in partnership with many organisations and at many levels from local to International.

  • தேவனே எங்கள் தேவை அனைத்திற்கும் ஆதாரமாக பல்வேறு வழிகளில் குறிப்பாக உதார மனதுடைய அவர் பிள்ளைகளின் நன்கொடைகள் அன்பளிப்பு மூலம் எங்கள் தேவைகளை சந்திக்கின்றார்.

  • GRN இன் நோக்கமே ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பழங்குடியினர்க்கும் வேறுபட்ட மொழியினர்க்கும் நற்செய்தி கிடைக்கச்செய்வதே ஆகும்.

தகவல் பெற்றுக்கொள்ளும்படி இருங்கள்

இயேசுவைப் பற்றிய கதைகளை ஒவ்வொரு மொழியிலும் சொல்லுவதற்கு ஊக்கமளிக்கும் கதைகளும் பிரார்த்தனை குறிப்புகளும் மற்றும் ஈடுபடுத்திகொள்ளும் வழிகளையும் பெற்று கொள்ளலாம்.

பொதுவல்லாத தனிப்பட்ட தகவல்களை GRN மிகவும் கவனமாக கையாளுகிறது. இப்படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் GRNக்கு இதில் உள்ள தகவல்களை உங்கள் வேண்டுகோளின்படி செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கிறீர்கள். உங்கள் வேண்டுகோளின்படி வேறு எந்த நோக்கத்திற்காகவும் அதைப் பயன்படுத்தவோ அல்லது வேறு எவரிடமும் வெளிப்படுத்தவும் மாட்டோம். மேலும் தனியுரிமை கொள்கை தகவல்களுக்கு காண்க தனியுரிமை கொள்கை.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் அறிந்து கொள்ள