குளோபல் ரிகார்டிங்க்ஸ் நெட்வொர்க் பற்றி
உங்கள் ஊழியம் எதைப் பற்றியது எதற்காக செய்யப்படுகிறது?
நாங்கள் கடவுளின் வார்த்தையாகிய சத்தியத்தை படிப்பறியாதவர்களுக்கும் மேலும் சிறுபான்மையான மக்கள் குழுக்களுக்கும் எங்கள் பதிவுகளின் வாயிலாக அவர்களது சொந்த மொழிகளில், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் ஆகும்படியாக, வல்லமையாக அறிவிக்கும் நோக்கத்தோடு செயல்படுகிறோம்.
உலகில் மொத்தம் எத்தனை மொழிகள் உள்ளன?
அது யாருக்குமே உறுதியாக தெரியாது. நீங்கள் எதைக் கணக்கிடுகிறீர்கள் என்பதை பொறுத்தது. "எத்னோலாக்" எனும் ஆய்வாளர்கள் 6,912 உயிருள்ள எழுதக்கூடிய மொழிகளை இனம் கண்டுள்ளனர். ஆனாலும் "தாய்மொழி" யிலான ஒலிவடிவ தொடர்புகளைப் பற்றி பேசும்போது, வேறுபட்ட கிளைமொழிகள் மற்றும் வேறுபாடுகளுள்ள மொழியையும் தனித்தனியாக கணக்கிட வேண்டியுள்ளது. ஒருவருடைய உச்சரிப்பு முறைகூட நம் பதிவுகளை பிறர் கேட்கும் முறையைப் பாதிக்க கூடும்.
13,000 வேறுபட்ட பேச்சுமுறைகளைப் பற்றி சில மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. GRN இல் நாங்கள் ஒரு "பால் பார்க் " வடிவமாக 12,000 மொழிகளையும், கிளை மொழிகளையும் பயன்படுத்துகிறோம்.இவற்றில் 6,000 மொழிகளில் பதிவுகளை செய்துள்ளோம்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
நாங்கள் அடிப்படையான வேதாகம கதைகளையும், வேதாகம போதனைகளையும் ஆயிரக்கணக்கான மொழிகளில் பதிவுகளை தயார் செய்கிறோம். இவ்வுலகத்தில் உள்ள அத்தனை மொழிகளிலும், மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கவும், அவர்களை சீஷராக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தோடு, நாங்கள் எளிய ஒலி ஒளி நிகழ்ச்சிகளையும் குறுந்தகடுகள் அல்லது படப் புத்தகங்களோடு கூடிய மற்ற ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு, குறிப்பாக படிப்பறியாதவர்கள் மற்றும் "பேச்சு மொழி" மட்டுமே கொண்ட மக்கள் சமுதாயத்தினருக்கு வேதாகமத்தின் அடிப்படை போதனைகளையும், செய்திகளையும் புரிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கிறோம். இன்னும் கூடுதலாக, மின்சாரத்தை சார்ந்திருக்க தேவையில்லாத சிறப்பான கைகளால் இயக்ககூடிய சாபர் mp3 வடிவங்களில் தயாரிக்கிறோம். இவைகளெல்லாம் அருட்பணியாளர்களுக்கும், உள்ளூர் சுவிசேஷ ஊழியர்களுக்கும், சபை போதகர்களுக்கும் மற்றும் எங்கள் சொந்த குழுக்கள் மூலமாக உலகெங்கும் விநியோகிக்கப்படுகிறது. நீங்கள் எங்கே பணியாற்றுகிறீர்கள்?
நாங்கள் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில்
எங்களது பனி மையங்களையும் தொடர்பு நிறுவனங்களையும் வைத்துள்ளோம். உலகின் எல்லா நாடுகளிலும் பதிவுகள் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. எங்களது மையங்களும் பணித்தளங்களும் எங்களது உள்ளூர் பணியாளர்களாலே வழக்கமாக இயங்கப்படுகிறது. எங்களது முதன்மையான நோக்கம் சிறிய பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்ற மக்கள் குழுக்கள் பற்றியதாக இருப்பதால், கடைக்கோடி மக்களிடம்கூட போக விரும்புகிறோம் நீங்கள் செய்து வருவதை ஏன் செய்கிறீர்கள்?இதற்கு அனேக காரணங்கள் உண்டு.
- நூற்றுக்கணக்கான மக்கள் குழுவினரிடம் அவர்களது சொந்த மொழிகளில் வேதகமங்களோ, புதிய ஏற்பாடுகளோ அல்லது வேதத்தின் பகுதிகள் இல்லை அல்லது மிக குறைவாக உள்ளது.
- உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதி மக்களுக்கு வாசிக்க தெரியாது. வேதத்தையோ, வேத பகுதிகளையோ அவை அவர்களது சொந்த மொழியில் இருந்தாலும், அவற்றை சரியாக பயன்படுத்தி கொள்ளுமளவுக்கு நன்றாக வாசிக்கத் தெரியாது.
- இம்மக்களில் பெரும்பாலானோர்,"பேச்சுமுறை சமுதாயங்களை சேர்ந்தவர்கள். இவர்களிடையே, முக்கிய தகவல்கள், பல்வேறு விதமான பேச்சு மற்றும் நடித்து காட்டும் வடிவங்களில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இங்கெல்லாம் அச்சிடப்படும் நூல்கள் போன்றவை அதிகமாக மதிக்கப் படுவதில்லை.
- உலக முடிவில், ஓவ்வொரு தேசத்திலும் இனத்திலும் மொழியிலும் இருந்து சிலர் அவரது சிங்காசனத்தை சுற்றிலும் நிற்பார்கள் என்று வேதாகமம் வாக்களிக்கிறது.
- கடவுள், தமது வார்த்தையாகிய வேதத்தின் மூலம், எல்ல மக்களுக்கும் நற்செய்தி அறிவித்து, எல்லா நாடுகளிலும் மக்களை சீடராக்கும்படி நமக்கு ஆணையிட்டுள்ளார்.
உங்களது நோக்கங்களும் குறிக்கோள்களும் ஓவ்வொரு செயல் திட்டத்திற்கும் ஓவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறாக உள்ளதா?
எங்களது நிகழ்ச்சிகளை பதிவு செய்பவர்களை "குறிப்பிட்ட" மக்கள் குழுவினரின் தேவைகளை (சிறப்பாக, ஆவிக்குரிய தேவைகளை) இனம் காணும்படி ஊக்குவிக்கிறோம். மேலும் அவர்களை புரிந்து கொண்டு சிறந்த முறையில் தொடர்பு கொண்டு செய்திகளை அளிக்க கதைகளையும் பாடல்களையும் மற்றும் பிற வடிவங்களிலும் தருகின்றனர். நாங்களும் ஓவ்வொரு மக்கள் குழுவிற்கும் பொருத்தமான சாதனங்களை தருவதற்கு ஏற்ற வகையில் ஒரு முழுமையான, சிறப்பான பணியை செய்ய முயன்று வருகிறோம். இதனால் தேவைப்படும்போதெல்லாம் இதற்கு முன் பதிவுசெய்யப்பட்ட மொழிகளையும் மறு ஆய்வு செய்கிறோம்.
இந்த சாதனங்களை யார் பயன்படுத்துகிறார்கள்?
எங்களது பதிவுகள் தயாரிக்கப்பட்டு நன்கு சோதிக்கப்பட்டும் முடிந்த பிறகு, எங்களது சொந்த குழுக்கள் எங்கே இந்தப் பதிவுகள் செய்யப்பட்டனவோ அங்கேயே திரும்பிச் சென்று அவைகளை விநியோகிக்கிறார்கள். நற்செய்தி அறிவிப்பதற்காக வேறு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வார்கள். இந்த குழுக்கள் அடிக்கடி அங்குள்ள உள்ளூர் திருச்சபைகள், ஊழிய நிறுவனங்கள் மற்ற அருட்பணியாளர்களோடு இணைந்து பணி செய்கிறார்கள். இந்த பதிவுகளும் இயக்கிகளும் அருட்பனியாலர்களுக்கும் அந்தந்த நாட்டு திருச்சபைகளுக்கும் போதகர்களுக்கும் மற்றும் சுவிஷேகர்களுக்கும் வெளிப்புற ஊழியங்களை நன்கு பயன்படுத்தி சீஷராக்கும் பணி செய்வதற்காக சிறப்பான சலுகைகளோடு அளிக்கப்படுகின்றன.நீங்கள் என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறீர்கள்?
முதலில் நாங்கள் வினையில் பதிவுகளை தொடங்கினோம். பிறகு பல ஆண்டுகளுக்கு ஒலித்தகடுகளை பயன்படுத்தினோம். இப்போது ஒழி குறுந்தகடு சீடி மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிற சாதனமாக உள்ளன. இப்போது நாங்கள் முக்கியத்துவம் தருவது எதற்கென்றால் உலகமெலாம்ம போதனைக்கும் சீஷராக்குதலுக்கும் பயன்படுபவை.
உங்கள் தயாரிப்புகள் இயேசுவின் ஊழியத்தையும் அருட்பணியையும் பற்றி பேசுகின்றனவா?
நற்செய்தி உரைகள் மிக அதிகமாக இயேசுவின் வாழ்க்கையையும் அருட்பணியையும் பற்றி பேசுகின்றன. "ஜீவிக்கும் கிறிஸ்து " செய்தி முழுக்க இயேசுவின் வாழ்வையும் ஊழியத்தையும் பற்றியே அமைந்துள்ளது. செய்திகளின் நூலகத்தில் உள்ள பல செய்திகள் இயேசுவின் வாழ்க்கை அல்லது ஊழியத்தின் ஏதோ ஒரு பகுதி பற்றி பேசுபவையாக இருக்கும்.
பரவலாக பயன்படுத்துகிற கோடிக்கணக்கான மொபைல் போனில் எங்களது பதிவுகளை ஏற்றுவதேயாகும்.
மேலும் பெரும்பாலான எங்கள் ஒலிப்பதிவுகள் எங்கள் வலைதளங்களில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கின்றன. பிறகு அவை உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் குறுந்தகடுகள் சீடிஸ்,மைக்ரோ எஸ்டி தகடுகள் மற்றும் மொபைல் போன்களில் பரிமாறிக் கொள்ளப்படும் ப்ளுடூத் முதலிய முறைகளில் விநியோகம் செய்யப்படுகின்றன. மின்சார வசதியில்லாத தொலைதூர சமுதாயங்களுக்கு நாங்கள் எங்களது சாபர் ஹேன்ட் வின்ட் ப்ளே பேக் சாதனங்களை பரிந்துரை செய்கிறோம்.
எங்கள் முக்கிய நோக்கம் மக்களுக்கு அவர்கள் உள்ளத்தோடு உறவாடக்கூடிய முறையிலும் மொழியிலும் கடவுளைப் பற்றிய அடிப்படை உண்மைகளையும் இரட்சிப்பின் வழிகளையும் எடுத்துரைப்பதாகும். வேறுவகையில் சொல்வதென்றால் எங்களது தயாரிப்புகள் நற்செய்தி சுவிசேஷ பணிக்கும் அடிப்படையான வேதாக "நற்செய்தி" உரை படைப்பு முதல் கிறிஸ்து வரையிலான வேதாகம செய்திகளின் ஒரு சுருக்கமான அறிமுகத்தை தருகிறது. " பார், கவனி, மற்றும் வாழ்" நிகழ்ச்சி வேதாகமக் கதைகளை ஆதியாகமம் தொடங்கி அப்போஸ்தலர் வரை இன்னும் விரிவாக, முழுமையாக, காலவரிசைப்படியும் , பொருள் வரிசைப்படியும் வழங்குகிறது. "ஜீவ வார்த்தைகள்" செய்திகளில் பலவும் இத்தலைப்போடு தொடர்புடையவைதாம். இந்த எல்லா தயாரிப்புகளும் நற்செய்தி பணி மற்றும் போதனைக்கு பயன்பட கூடியவையே.
பெரும்பாலான செய்திகள் வாழ்க்கை, மரணம், இரட்சிப்பு, நியாயத்தீர்ப்பு, பரலோகம், நரகம் முதலியவை பற்றிய பல விவரங்களை உள்ளடக்கி உள்ளன. இந்த தயாரிப்புகள் எல்லாம் பெரும்பாலும் "பேச்சுமுறை தொடர்பாளர்களுக்காக" உருவாக்கப்பட்டவை. ஆதலால் அவைகளின் நடை "ஒரு பிரசங்கம்" போல அமைந்திருக்காது. கதைகள் மூலமாகவே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மொழிக்கும் பொருத்தமான செய்திகள், வியாதி, மரணம், அசுத்த ஆவிகளை குறித்த அச்சம் முதலிய குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு பதில் கூறும் வகையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. "நற்செய்தி" உரை சுருக்கமாக, கிறிஸ்தவ குடும்பம், "மாயவித்தை", திருச்சபையும் சாட்சி கூறுதலும் முதலிய விவரங்களை பற்றியும் மிகவும் சுருக்கமாக எடுத்துரைக்கின்றது.
பெரும்பாலும் வேதாகமம் மொழி பெயர்க்கப்படாத மொழிகளில்தான் நாங்கள் வேலை செய்கிறோம். வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டுள்ள மொழிகளில் நாங்கள் சில பகுதி அல்லது முழு புத்தகங்களை பதிவு செய்கிறோம். இதை பொதுவாக ஏதாவது ஒரு வேதாகம மொழி பெயர்ப்பு குழுவினருடன் இணைந்து செய்கிறோம். பொதுவாக நாங்கள் முழு வேதகமத்தையோ அல்லது புதிய ஏற்பாட்டையோ ஒலிப்பதிவு செய்வதில்லை.
"பேச்சுமுறை சமுதாயங்களில்" இந்த செய்திகளை போதிப்பதற்கு மேற்கத்திய முறையிலான உபதேசப் போதனைகள் சிறந்த முறைகள் அல்ல. கடவுளின் தன்மை, மனிதனின் சுபாவம், பாவம், இரட்சிப்பு முதலியவைப் பற்றி போதிக்க வேதாகம கதைகள் பயன் படுத்தப்படுகின்றன. "முறையான இறையியல்" நடையில் எங்களிடம் உபதேச கொள்கைகளை பற்றிய தயாரிப்புகள் இல்லை.
எங்களிடம் ஆங்கிலத்திலும் பிற எண்ணற்ற மொழிகளிலும் பல்வேறு உரைகள் அடங்கிய நூலகம் உண்டு.ஒரே பெயருடைய ஒரு நிரல் உதாரணமாக : "நற்செய்தி" ஒரே விதமான செய்தியைத்தான் எல்லா மொழிகளிலும் பேசும். அதனால் ஆங்கிலத்தில் உள்ள உரை செய்தியை படித்தாலே அந்த நிரலுக்குள் என்ன உள்ளது என்று ஓரளவிற்கு உங்களுக்கு புரிந்துவிடும். எனினும் ஒலிப்பதிவாளர்கள் "இழிவான" விதத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உரை பதிவுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் அது ஒரு வறட்சியான மொழிபெயர்ப்பாக இருக்கும். இந்த உரை செய்திகள் இன்னொரு மொழியில் கதை சொல்வதற்கு அடித்தளங்களாக அமையும். சில சமயங்களில் தரமான பொது உரைசெய்திகள் பல்வேறு மொழிகளுக்கும் பரவலாக பயன்படுத்தப்படும். ஆனாலும் குறிப்பிட்ட மக்கள் குழுவினருக்கு அது பொருத்தமாக உள்ளதா என்பதில் நாம் கவனமாக உறுதி செய்ய வேண்டும்.
இது பெருமளவில் மாறுபடும். பல ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட மொழிகள் குறைந்த அளவிலான படைப்புகளையே பெற்றிருக்கும். உதாரணமாக 15 - 30 நிமிடங்கள் மட்டுமே. மிகச் சில மொழிகள் 15 - 20 மணி நேரங்களுக்கான உரைசெய்தியை பெற்றிருக்கும். தற்போது எந்தவித ஆதார வளமில்லாத மக்கள் கூட்டத்தினருக்கு நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்து 8 - 10 மணி நேரத்திற்கான படைப்புகளை தயாரிக்க முயல்வோம். சில நேரங்களில் வேறு ஆதார வளங்கள் கிடைக்க பெறும் ஒரு மொழிக்கு ஒரு குறிப்பிட்ட ஆதார வளத்தை நாம் தயாரிக்கலாம்.
"ஜீவ வார்த்தைகள்" நிகழ்ச்சி நிரல் ஒவ்வொன்றும் 3 - 5 நிமிட செய்திகளாகவோ அல்லது பாடல்களாகவோ இருப்பதால் அவைகள் இடை இடையே ஒவ்வொரு தடத்திலும் நிறுத்தப்படலாம். ஓலி ஒளி படைப்புகள் ஒவ்வொரு படத்திற்கும் அல்லது ஏதோ ஒரு கதையை கூறும் ஒரு பகுதி நிறுத்தப்பட்டு இடை இடையே அவைகள் பற்றின விளக்க விவாத உரை செய்யலாம் உதாரணமாக : நோவாவை பற்றி
உங்கள் பதிவுகள் பற்றி கூறுங்கள்.
உங்கள் GRN இன் ஒலிப்பதிவுகளின் முக்கிய நோக்கம் என்ன?
அவை படைப்பு தொடங்கி கடவுளின் முழுமையான மீட்பின் திட்டத்தை பற்றி பேசுகின்றனவா?
நித்தியமான காரியங்களைப் பற்றிய வினாக்களுக்கு அவை விடை கூறுகின்றனவா?
பல்வேறு தேவைகளுக்கான வேதாகம தீர்வுகளை இவை எடுத்துரைக்கின்றனவா?
இந்த பதிவுகள் வேதாகமத்தின் பகுதிகளையோ அல்லது முழு வேதாகமத்தை உள்ளடக்கி உள்ளனவா?
எப்படி இந்த பதிவுகள் அடிப்படையான கிறிஸ்தவ கொள்கைகளை அறிமுகப்படுத்துகின்றன?
எல்லா GRN பதிவுகளுக்கும் பொதுவான உரை உள்ளதா?
ஒரு மொழியில் எத்தனை ஓலி பதிவுகள் செய்யப்படும்?
ஒரு ஓலி பதிவு வழக்கமாக எவ்வளவு நேரம் இயங்க கூடியதாக இருக்கும்?
எங்களது "ஜீவ வார்த்தைகள்" என்ற நிரல் பொதுவாக தொடர்ச்சியான சிறு செய்திகளையும் பாடல்களையும் கொண்டதாக தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு செய்தியும் 4 நிமிடங்கள் செல்லும். ஒரு முழு நிகழ்ச்சி நிரல் 30 முதல் 60 நிமிடங்களுக்கு செல்லும். "நற்செய்தி" நிகழ்ச்சி நிரல் சராசரியாக 40 - 50 நிமிடங்களுக்கு அமையும். சில மொழிகளில் இது சற்று நீண்டு இருக்கும். "பார், கவனி,வாழ்" நிகழ்ச்சி நிரலின் 8 பகுதிகள் ஒவ்வொன்றும் 35 - 45 நிமிடங்களுக்கானவை. "ஜீவிக்கும் கிறிஸ்து" நிரலுக்கான முழு ஆங்கிலப் பதிவுக்கு சுமார் 2 மணிநேரம்.
இந்த ஓலி பதிவுகள் சிறு சிறு கூறுகளாக பகுக்கப்படுகின்றனவா?