GRN இன் வரலாறு

இந்தகார்டுடாக்கார்டுபோர்டு பிலேயர்ஸ்

அவளுடைய நோயினால் தடுக்கப்பட்டாள்...

இந்த காஸ்பெல் ரிக்கார்டிங்ஸ் தொண்டூழியம் 1937 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஜாய் ரிட்ட்ர் ஹோப் என்பவர் ஹொன்டுராஸ் என்ற இடத்தில் தன் தொண்டூழியத்தை முடித்துவிட்டு வந்து வியாதி படுக்கையில் விழுந்து விட்டார். தாம் அன்புடன் நேசித்து வந்த இயேசுவை ஏற்றுக்கொண்ட மதமாறிய மக்களை நினைத்து இவர்களை விட்டுச்செல்ல நேரிடுமோ என்று மனதில் ஆழமான ஏமாற்றமும் துக்கமும் கொண்டார். - எழுத்தறிவு இல்லாததினால் இயேசுவை பற்றியதான நற்செய்திகளை வாய்மொழி வாயிலாக அறிந்துகொண்டுவருகிற இம்மக்களை எண்ணி பெரும் துயர் அடைந்தார்.

பின்னால் விட்டுச்சென்றது

ஸ்பானிஷ் மொழியில் தனக்கு பின்விட்டு சென்ற பதிவுசெய்யப்பட்ட செய்திகள் வாயிலாக ஒரு அற்புதமான மரபை படைத்து விட்டார். இதன் மூலம் அப்போதிருந்த மதம்மாறிய மக்கள் தங்கள் விசுவாசத்தை பலப்படுத்துவதற்கும் மற்ற மக்கள் அறிந்துகொள்வதற்கும் ஏதுவாக அமைந்துவிட்டது. எப்படியிருந்தாலும், "விசுவாசம் கேள்வியறிவினாலும் கேள்வி அறிவு தேவனுடைய வார்த்தையினாலும் வரும்".

1938 ஆம் ஆண்டில் முதல் பதிவு!

தாராள மனப்பான்மையுடன் உதவி செய்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி, முதல் காஸ்பல் நற்செய்தி ஸ்பானிஷ் மொழியில் 1938 ஆம் ஆண்டு இறுதியில் பதிவு செய்யப்பட்டபோது இது எவ்வளவு பலனளிக்க ஆரம்பித்து விட்டது என்பதை ஜாய் யினால் காணமுடிந்தது. சிற்றோடையாக ஆரம்பிக்கப்பட்டது இப்போது மெய்யாகவே பெரும் வெள்ளமாக உருவெடுக்க ஆரம்பித்தது. ஹொன்டுராஸ் மட்டுமல்லாது ஸ்பானிஷ் மொழி பேசப்படும் மத்திய மற்றும் சவுத் அமெரிக்கா விலுமிருந்து ஸ்பானிஷ் பதிவுகளுக்கான விசாரிப்புகள் வேகமாயும் ஏராளமாகவும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.

திருப்புமுனை

1940 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக விட்டது. அரிசோனா வில் உள்ள நவஜோ இந்தியர்களுக்காக சுவிசேஷ நற்செய்தி பதிவுகள் செய்து தரும்படி ஜாய் கேட்டுக்கொள்ளப்பட்டார். ஒவ்வொரு கூடுதல் மொழியும் என்னும் அதிகமான மொழி பதிவுகளுக்கு வழிவகுத்தது. அதற்கு அவர் ஒப்புக்கொண்டு மிகப் பெரிய அளவிலான செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி நிறைவேற்றினார் - பூமியின் கடைசி பரியந்தமும் சுவிசேஷத்தை எடுத்து செல்வதற்கு.

இன்று - 30 க்கும் மேற்பட்ட நாடுகளில்

இது ஒரு சர்வதேச அருட்பணியாக மையங்களையும் அடித்தளங்களையும் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த காஸ்பல் ரிக்கார்டிங்ஸ் உருவாக்கி உள்ளது.

தற்காலிக ஒலிப்பதிவுகள் சர்ச் கட்டிடங்கள், வகுப்பறைகள், அல்லது ஒரு மரத்தின் கீழே இந்த பதிவுப் பணி செய்யப்படுகிறது. இந்த பதிவுகள் திருத்தம் செய்யப்பட்டு பின்னர் இசை அல்லது பாடல்கள் சேர்க்கப்பட்டு விநியோகம் செய்யப் படுவதற்கு தயாராகிறது.

இந்த விநியோகம் மக்களைக் கொண்டு ஒவ்வொரு கிராமமாக அல்லது மற்ற அருட்பணிகள் மூலம் அல்லது குறிப்பிட்ட மொழி பேசும் மக்களிடையே அங்கு நிறுவப்பட்டுள்ள தேவாலயங்களில் செய்யப் படுகிறது. மக்கள் அதிகமாக கூடுகின்ற மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், மற்றும் சந்தை இடங்களில் ஒலிப்பதிவுகள் கேட்கப்படவும் கிடைவருங்காலம்க்கப்படவும் செய்யப்படுகின்றது. கிராமவாசிகள் (பெரும்பாலோர் முதல் முறையாக), ஜீவன்தரும் வார்த்தைகளை - அவர்கள் முழுமையாக புரிந்துகொள்ளும்படி தங்களுடைய மொழியிலே கேட்கிறார்கள்.

வருங்காலம்

உபகரணங்கள் மற்றும் கையாளும் முறைகளையும் புதுப்பித்து இன்னும் திறமையுடன் மக்களை சென்று சேரத்தக்கதாக இந்த அருட்பணி தொடர்ந்து முயன்று வருகிறது; இன்னும் ஆயிரக்கணக்கான புதிய ஒலிப்பதிவுகள் செய்யப்படவேண்டும்; பழைய பதிவுகள் புதுப்பிக்கப்பட்ட வேண்டும்; புதிய ரிக்கார்டிஸ்ட் பயிற்சி வேண்டும்; மொபைல் தொழில் நுட்பங்களை கொண்டு புதிய விநியோக முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

உலக முழுவதும் இவ்வருட்பணியில் தங்களை ஈடுபடுத்தியுள்ள GRN பணியாளர்களுக்காகவும் அவர்கள் ஈடுபட்டுள்ள வேறுபட்ட திட்ட பணிகளுக்காகவும் ஆதரவு தந்து தொடர்ந்து ஜெபியுங்கள். தொடர்ந்து இன்னும் அநேக புதிய பணியாளர்கள் இப்பணிகளை செய்வதற்கு முன்வரும்படியாக ஜெபியுங்கள். ஒவ்வொரு இனத்தவர்க்கும் பல்வேறு மொழி பேசுபர்க்கும் சுவிசேஷம் கொண்டு செல்லப் பட இன்னும் எவ்வளவோ பணிகள் செய்யப்படவேண்டும். இவையெல்லாம் விசுவாசமுள்ள தேவ பிள்ளைகளின் ஆதரவும் அவர்கள் ஏறெடுக்கும் ஜெபத்தினால் மட்டுமே முடியும்.

  • சாதாரண வர்த்தக ஆடியோ பிளேயர்கள் செயல்படஇயலாத இடத்தில் சிறப்பு அம்சங்களைக் கொண்ட கொண்ட ஆடியோ பிளேயர்கள் செயல் படுத்த படுகின்றன.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் அறிந்து கொள்ள