பார்க்க, கேட்க, வாழ தொடர் ஆடியோ காட்சியமைப்புகள் மிக சிறந்த முறையில் நற்செய்தி மற்றும் கிறிஸ்தவ போதனைகளுக்காக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகத்திலும் 24 படங்கள் உள்ளன.
இந்த தொடர் வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முக்கிய நபர்கள், இயேசுவின் வாழ்க்கை, மற்றும் ஆரம்பகால சபைகளைப் பற்றி ஒரு நல்ல ஆய்வினை கொடுக்கிறது. குறிப்பாக இது கல்வியறிவு இல்லாத மக்களுக்கு சுவிசேஷ நற்செய்தியையும் கிறிஸ்தவ போதனைகளையும் அறிந்துகொள்ள ஏற்றதாக உள்ளது.
காட்சி போதனை விளக்கக்காட்சிகளை பற்றி அறியாதவர்களையும் கூட கவரும் விதத்தில் மிகவும் தெளிவாக பிரகாசமான நிறங்களில் அமைந்துள்ளது.
- தேவனோடு ஆரம்பம் (ஆதாம், நோவா, யோபு, ஆபிரகாம்)
- வல்லமையான தேவ மனுஷர்கள் (யாக்கோபு, யோசேப்பு, மோசே)
- தேவன் மூலமாக வெற்றி (யோசுவா, டெபோரா, கிடியன், சாம்சன்)
- தேவ ஊழியர்கள் (ரூத், சாமுவேல், தாவீது, எலியா)
- சோதனைகளில் தேவனுக்காக (எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர்)
- இயேசு போதகர் சுகமளிப்பவர் (மத்தேயு முதல் மாற்கு வரை)
- இயேசு ஆண்டவர் இரட்சகர் (லூக்கா முதல் யோவான் வரை)
- பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (வளரும் இளம் சபைகள் மற்றும் பவுல்)
ஆடியோ ஒலிப் பதிவுகள்
நூற்றுக்கணக்கான மொழிகளில் கிடைக்கப்பெறும் இப்பதிவுகள் படங்களோடு ஒருங்கிணைந்து இயக்க தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இடையிடையே இயக்குதல் நிறுத்தப்பட்டு கேள்விகள், விவாதங்கள், மற்றும் விளக்கங்கள் இவைகளுக்கு சந்தர்ப்பம் கொடுப்படுகிறது.
உள்ளூர் சமூகத்தில் மதிக்கப்படும் தெளிவான குரல் கொண்ட தாய்மொழி பேச்சாளர்களைக் பதிவுகள் செய்யப்படுகின்றன.உள்ளூர் இசை மற்றும் இசை சில நேரங்களில் படங்களுக்கு இடையே சேர்க்கப்படும். பல்வேறு சோதனை நுட்பங்களை பயன்படுத்தி தொடர்பும் மொழிபெயர்ப்பும் துல்லியமாக உறுதி செய்யப்படுகின்றன.
இந்தப் பதிவுகள் mp3 யில் பதிவிறக்கம் செய்யப்படுவதற்கும் மற்றும் CD அல்லது கேசட் களிலும் கிடைப்பெறும்.
அச்சிடப்பட்டுள்ள உபகரண பொருட்கள்
பிளிப்ச்சார்ட்

இந்த A3 அளவிலானது (420mm x 300mm or 16.5" x 12") ஸ்பைரல் ஆக மேலே கட்டப்பட்டிருக்கும். அதனால் பெரிய மக்கள் குழுவிற்கு பொருத்தமாக இருக்கும்.
சிறுபுத்தகங்கள்
இந்த A5 அளவிலானது (210mm x 140mm or 8.25" x 6") ஸ்டேப்பிள் செய்யப் பட்டிருக்கும். இது சிறிய மக்கள் குழுவிற்கும் தனிப்பட்டவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.
பாக்கெட்புத்தகங்கள்
இவைகள் A7 கேசட் அளவிலானவை (110mm x 70mm or 4.25" x 3"). மற்றவர்களுக்கு கொடுப்பதற்கும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் ஏற்றதாக இருக்கும். கறுப்பு மற்றும் வெள்ளை இரு நிறங்களிலும் பதிப்புகள் உள்ளன.
எழுதப்பட்ட விரிவுரைக்குறிப்புகள்
எளிமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்டஇவைகள் ஆன்லைனில் கிடைக்கும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்புக்கும் பதிவுகள் செய்வதற்கும் இந்த உரைகள் ஒரு அடிப்படையிலான வழிகாட்டியாக உள்ளது. அவைகள் மக்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் சிந்தனை முறைகள் எல்லாவற்றுக்கும் பொருத்தமானதாக இருக்கும். சில சொற்களின் பாங்கு மற்றும் கருத்துக்களுக்கு ஒரு முழு விளக்கம் தேவைப்படுகிறது அல்லது வேறுபட்ட கலாச்சாரங்களில் இருந்து நீக்கப்படுகிறது. படங்கள் அடிப்படையிலான கதைகளை சிறந்த முறையில் விளக்குவதற்கு அதற்கேற்ற உள்ளூர் கதைகள் மற்றும் பயன்பாடுகளும் இவ்வுரையில் சேர்க்கப்படலாம்.
க்ளிப்ச்சார்ட் எடுத்துச்செல்லும் பைகள்
இந்த எடுத்துசெல்லும் பைகளில் 8 க்ளிப்ச்சார்ட்ஸ் மற்றும் தொடர்பான குறிப்புரைகள், CDகள், கேசட்கள் வைப்பதற்கு பயன்படுத்தலாம்.
வேதாகம ஆயத்த படங்கள்
இந்த CDக்களில் "பார்க்க கேட்க வாழ" இன்னும் "நற்செய்திகள்" மற்றும் "ஜீவிக்கும் கிறிஸ்து" போன்ற தொடர்களில் உள்ள அனைத்து படங்களும் இடம்பெறும். உயர்தர அழுத்தமான கறுப்பு வெள்ளை நிழற்படங்கள் TIFF கோப்புகளில் பிரிண்ட் (up to A4 size at 300 DPI), செய்வதற்கும் மற்றும் நடுத்தர அழுத்தமான வண்ணங்களுடன் கம்ப்யூட்டர் திரை காட்சிக்கு (at 900x600 pixels) அல்லது பிரிண்ட் (up to A7 size at 300 DPI) செய்வதற்கு JPEG கோப்புகளிலும் இருக்கும். குறிப்புரைகளும் மற்ற பிற ஆதார வளங்களும் CD யில் இருக்கும்.