GRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல்

GRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல்

ஆழமாக அறிந்து கொள்ளுதல்

GRN ஆடியோ காட்சி விளக்கத்தில் அடங்கிஉள்ளவை :"நற்செய்தி,"பார்க்க கேட்க வாழ,"மேலும்"ஜீவிக்கும் கிறிஸ்து". இந்த விளக்கங்களுக்கான உரைகள் எல்லாம் வேதாகமத்தில் உள்ள கதைகளாகும். அவைகள் வேதாகமத்தின் மொழி பெயர்ப்பு அல்ல ஆனால் எளிமையாக விதத்தில் சரியான வேதாகம செய்திகளை கூறும். மூலபடிவ உரையில் விளக்கமளிக்கும் குறிப்புகள் எதுவும் கிடையாது.

இது ஏன் இப்படி? ஏனெனில் கடவுளுடைய வார்த்தை கேட்பவர்களின் இருதயத்தில் பேசவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். செவிசாய்த்து கேட்பவர்களுக்கு கடவுளே தன் செய்தியை கொடுக்கும்படி வேண்டுகிறோம். இதன்வழியில் நிற்கவும் விரும்புகிற விளைவுகளையும் வேதாகம கதையில் இருந்து ஏற்ற நேரத்தில் எந்த செய்தி கொடுக்கப்பட வேண்டும் என்பதை கடவுள் அறிவார் இதை அனுமானிக்க நாங்கள் விரும்பவில்லை. வேதாகம விளக்கம் இறையியல் பின்னணி, உலக பார்வை, கலாச்சாரம் தற்போதைய சூழ்நிலை போன்ற இந்த காரணங்களால் பாதிக்கப்படுகின்றது. இதனால் வேதாகமம் முழு உண்மையான சத்தியத்தை உணர்த்தவில்லை என்றோ அல்லது ஒவ்வொரு கருத்து விளக்கமும் ஒரே சீராக ஏற்கத்தக்கதாக இல்லை என்றோ கருத்து கொள்ளக்கூடாது. எனினும், தேவன் ஒரே கதை மூலமாக தன் நோக்கத்தின்படி வேறு பட்ட சூழ்நிலையில் மக்களுக்கு சரியாக சென்று சேரும்படி செய்தியை அளிக்கிறார்!

முதன்மையான குறிக்கோள்

எங்களின் முக்கிய குறிக்கோள் "உதவி ஆவணத்தை " பயன்படுத்தி தேவனின் செய்தியை கேட்க்கும்படியாக செய்து அதன்மூலம் அவர்களே ஏற்று உணரும்படியாக விட்டுவிட வேண்டும். நாம் அவர்களுக்கு சொல்லக்கூடாது. மக்களுக்கு வேதாகம கதைகளை காண்பித்து அவர்களே அதன்மூலம் தேவனின் வார்த்தையை கேட்க்கும்படியாக நாங்கள் உதவி செய்கிறோம்.

மேற்கத்திய நாடுகளின் கல்வியறிவு பின்னணியை சார்ந்தவர்களைவிடவும் புறம்பாக வாய்வழி தொடர்பு கொள்பவர்கள் எடுத்து கூறும் கதைகளின்மூலம் முக்கியமான படிப்பினையை பெற்றுக்கொள்வார்கள்.

கற்று கொள்ளுதல் மற்றும் கருத்துப்பரிமாறும் விதம்

ஒரே கலாச்சாரத்தை கொடுள்ள மக்களிடம்கூட அவர்கள் கற்று கொள்ளும் திறன் வேறுபடுகிறது. சிலர் புத்தகங்களில் இருந்து கற்று கொள்வர் மற்றவர்க்கு காட்டப்படவேண்டும். சிலர் சுலபமாக கேட்டு ஞாபக்கத்தில் கொள்வர் சிலர் மறந்துவிடாமல் இருக்க எழுதி வைத்துக்கொள்வர். மேலும் கற்றுக்கொள்ளும் விதம் மற்றும் கருத்து பரிமாறிக்கொள்ளும் விதம் கலாச்சாரத்துக்கு கலாச்சாரம் கணிசமாக வேறுபடலாம். ஒரு பாரம்பரிய சமுதாயத்தில் இளம் ஆசிரியர்களை விட வயதான பெண்கள் பாரம்பரியத்தை அதிகமாக வெளிக்காட்ட முடியும். மேற்கத்திய நாடுகளில் இதுபோல் இல்லை. சில கலாச்சாரத்தில் வயதான பெண்களே பாரம்பரியத்தை பற்றி எடுத்துரைப்பவர்களாக இருப்பர். மேலும் கதை சொல்பவர்களாகவும் இருப்பர்.

கேட்க பல கேள்விகள் உள்ளன:"ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் கற்பிக்க முடியுமா?" "ஒரு தனி நபர் தன் கருத்துக்களை வெளிபடுத்த முடியுமா?" "செல்வாக்கும் அதிகாரமும் பெற்ற மக்கள் யார்?"," வெவ்வேறு விதமான சூழ்நிலைகளுக்கு எந்த விதமான தொடர்புகொள்ளல் பொருத்தமாயிருக்கும் - பாடல்கள், நாடகம், ஓவியம்?","கேள்விகள் பயன்படுத்தப்படலாமா அல்லது அது பொருத்தமாக இருக்காதா?" " உங்கள் கலாச்சாரம் எப்போதும் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் உங்களை ஒத்து போகச்செய்கிறதா?" , ஒரு சிலவற்றை கூறுங்கள்.

நல்ல போதனை என்பது ஒரு இலக்காக குறிக்கப்பட்ட மக்கள் குழுவினருக்கு கற்றுக்கொள்வதற்கும் கருத்து பரிமாற்றுதலுக்கும் ஏற்ற வகையில் புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கும். " எல்லாவற்றிற்கும்ஒரே அளவிலான பொருந்தும்" என்ற அணுகுமுறை இல்லை. ஆனால் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பொருந்தத்தக்க பரந்த கொள்கைகள் உண்டு.

பயன்படுத்துவதற்கான வழிகாட்டுகள்

எங்கள் முதன்மையான குறிக்கோள் மக்கள் கடவுளின் செய்தியை கேட்டு புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற கொள்ளத்தக்கதாக தக்கதாக செய்தல் என்றால் இதை எப்படி எளிதாக செய்ய நாங்கள் என்ன செய்யவேண்டும்?

1.பிரார்த்தனை (ஜெபம்) செய்யுங்கள்

இந்த ஆத்தும ஆக்கபணியில் மக்கள் மீட்கப்பட்டு இரட்சிக்கப்படவும் தேவனை அறியும் அறிவிலும் விசுவாசத்திலும் வளர பரிசுத்த ஆவியானவரின் பணியும் அவசியம்.இதற்கு குறுக்கு வழிகளோ மற்றும் மாற்று வழிகளோ இல்லை.பிரார்த்தனை மிகவும் அவசியம்.

2. ஆரம்பத்தில் தொடங்கி பணியை மெதுவாக செய்யுங்கள்

குறிக்கப்பட்ட குழுவினருக்கு தெரிந்து இருக்கிறவைகளோடு படைப்பில் இருந்து துவங்கி ஏற்றவாறு இணைத்து கொள்ளலாம்.விரைவாக எல்லா உபகரண பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம். பட விளக்கங்களை பயன்படுத்தப்போவதானால் முன்னமே எங்கெங்கு இடைநிறுத்தம் வேண்டும் என்பதை வரையறுத்து அதன்படி செய்து அவ்வேளையில் அவர்களோடு கலந்துரையாடுங்கள். முழு கதையையும் ஒரே வேளையில் கேட்டாலும் அல்லது தவணை முறையில் கேட்டாலும் மதிப்பு உள்ளது. சில வேளைகளில் அவர்களிடமே கேளுங்கள், " இப்போதே மேலும் கேட்க விரும்புகிறீர்களா அல்லது நாளை கேட்கிறீர்களா?"

3.மக்கள் கதையை ஏற்றுக்கொள்வதற்கு உதவுங்கள்

கதையை மீண்டும் மீண்டும் விரிவாக சொல்வதன் மூலமாகவும் வாய்வழியாக அவர்களை சொல்ல வைப்பதன் மூலமாகவும் இயக்கி மூலம் கேட்கவும் செய்து அவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும்படி செய்யுங்கள்

4. அறிந்து கொள்ளுதலை உற்சாகப்படுத்தி மேம்படுத்துங்கள்

கடவுளின் சிறப்பியல்புகளையும் அவரது சித்ததையும் எடுத்துரைக்கும் பழைய ஏற்பாட்டு கதைகளை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு முறை அதிகமான புதிய பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டாம்.

5. தகுந்த கேள்விகளை பயன்படுத்தவும்

கேட்கப்படும் கேள்விகள் முறையானதாக இருப்பின் இதுபோன்ற கேள்விகளை முன்வைக்கலாம். அவைகள் நெறிமுறைகளுக்கு உட்படாதவைகளாக இருப்பதால் பல பல கதைகளில் பயன்படுத்த முடியும். இதனால் ஒவ்வொரு கதைக்கும் வேறுபட்ட கேள்விகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதில்லை.

  1. இந்த கதையில் உங்களுக்கு பிடித்தது என்ன?
  2. மற்றவர்களுக்கு இக்கதை பிடிக்காமல் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
  3. உங்களை கவர்ந்த கதாபாத்திரம் யார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறதா?
  4. இந்த கதை கடவுளை பற்றி என்ன கற்பிக்கின்றது?
  5. இந்த கதை மக்களை பற்றி நமக்கு என்ன கற்பிக்கின்றது?
  6. இந்த கதைக்கு இருக்குமானால், எந்த விதமான பதிலளிப்பு செய்ய விரும்புகிறீர்கள்?
  7. இந்த கதையைப் பற்றி எதுவும் கேள்விகள் எங்களிடத்தில் கேட்க விரும்புகிறீர்களா?

துணைக்கேள்விகள் மேலே கூறப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க பயன்படுத்தலாம்.உதாரணமாக 5 கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு. (ஆரம்ப கட்டத்தில் சரியான பதிலளிப்பு கிடைக்காத பட்சத்தில்).எப்படி கூட்டத்தில் சூம்பின கையையுடைய மனுஷனை குணப்படுத்துவதற்கான இயேசு என்ன செய்தார்? அவர்கள் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இப்படிபட்ட கதை அவர்கள் கலாச்சாரத்தில் உள்ளதா என்று கேட்பது பொருத்தமாக இருக்கலாம். அவர்கள் அக்கதையை கூறும்படி கேளுங்கள். நீங்கள் சொன்ன கதையில் இருந்து அது எப்படி வேறுபடுகிறது என்று கேளுங்கள்

கதையை பொறுத்து அல்லது அப்போது நடக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு மற்ற கேள்விகளை வேறுபடுத்தி பயன்படுத்தி கொள்ளலாம். பின்வருமாறு இந்த சில உதாரணங்கள்:

  • இயேசுவின் போதனைகளை தொடர்ந்து மக்கள் பின்பற்றி வந்தால் உங்கள் கிராமத்தில்/குடும்பத்தில்/வாழ்க்கையில் எப்படி வித்தியாசமாக இருக்கும்?
  • இக்கதைப்போன்ற நிலைமை உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் கிராமத்தில் காணப்படுமா அல்லது இருக்காதா?
  • இக்கதையின் கதாபாத்திரம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
  • நீங்கள் ஏன் கர்த்தர் இயேசு இதை கூறினார்/செய்தார் என்று யோசிக்கிறீர்கள்?

    6. நீங்கள் ஆக்கபூர்வமாக இருந்து உங்கள் படிப்பினைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்

    இது ஒரு அறிமுக வழிகாட்டி மட்டுமே. உங்கள் அணுகுமுறை பயனுள்ளதாக மற்றும் பலனளிக்கக்கூடியதாக இருப்பின் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் அணுகுமுறையில் எதுவும் தவறுகள் செய்திருப்பின் அதைக்கூட மற்றவர்கள் உங்களிடமிருந்து கற்றுகொள்ள தயவுசெய்து அதையும் பகிர்ந்துகொள்ளுங்கள். எங்களுடன்கருத்து பரிமாற்றல் தொடர்பில் தொடர்பு கொள்ளுங்கள்

  • தொடர்புடைய தகவல்கள்

    சுவிசேஷத்திற்கும் வேதாகம பாடங்களுக்குமான வள ஆதாரங்கள் - குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்வொர்க் நற்செய்தி பரப்படுவதற்கும் அடிப்படை வேதாகம கற்பித்தலுக்கும் ஆடியோ பொருட்களை பட புத்தகங்கள் மற்றும் கைவிசை ஆடியோ இயக்கிகளுடன் இணைத்து ஆயிரக்கணக்கான மொழிகளில் தயார் செய்கிறது.

    ஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.

    ஆடியோ மற்றும் ஆடியோ-காட்சி உபகரண பொருட்கள் - எங்களிடம் 6000 க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள பெரிய அளவிலான வள ஆதாரங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றதான குறிப்பாக பேச்சின் வாயிலாக தொடர்பு கொள்பவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.