"ஜீவிக்கும் கிறிஸ்து" ஆடியோ- காட்சி

"ஜீவிக்கும் கிறிஸ்து" ஆடியோ- காட்சி

வேதாகம படங்களில் உள்ள ஜீவிக்கும் கிறிஸ்து என்ற தொடர் படைப்பில் இருந்து இரண்டாம் வருகை மட்டும் கிறிஸ்துவின் வாழ்க்கையை விளக்கமாக அளிக்கிறது. இது குறிப்பாக கல்வியறிவு இல்லாத மக்களிடையே சுவிசேஷ நற்செய்திகளையும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டு செல்வதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. காட்சி போதனை விளக்கக்காட்சிகளை பற்றி அறியாதவர்களையும் கூட கவரும் விதத்தில் மிகவும் தெளிவாக பிரகாசமான நிறங்களில் அமைந்துள்ளது.

ஆடியோ ஒலிப்பதிவுகள்

படங்களுடன் இணைந்து இயக்க தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டு இந்த பதிவுகள் டஜன் கணக்கான மொழிகளில் கிடைக்கிறது. கேள்வி நேரம், கலந்துரையாடல் மற்றும் விளக்கங்கள் இவற்றை பொறுத்து தேவைக்கு ஏற்ப இயக்குதல் இடையிடையே நிறுத்தப்படலாம்.

உள்ளூர் சமூகத்தில் மதிக்கப்படும் தெளிவான குரல் கொண்ட தாய்மொழி பேச்சாளர்களைக் பதிவுகள் செய்யப்படுகின்றன.உள்ளூர் இசை மற்றும் இசை சில நேரங்களில் படங்களுக்கு இடையே சேர்க்கப்படும். பல்வேறு சோதனை நுட்பங்களை பயன்படுத்தி தொடர்பும் மொழிபெயர்ப்பும் துல்லியமாக உறுதி செய்யப்படுகின்றன.

இந்தப் பதிவுகள் MP3 யில் பதிவிறக்கம் செய்யப்படுவதற்கும் மற்றும் CD அல்லது கேசட் களிலும் கிடைப்பெறும். (அனைத்து வடிவங்களும் ஒவ்வொரு மொழியிலும் கிடைக்கப்பெறாது.)

அச்சிப்பட்டுள்ள பொருட்கள்

அச்சிப்பட்டுள்ள படங்களின் தொகுதி

120 உதிரியான வர்ண துண்டு படங்கள் A4 (300mm x 215mm or 12" x 8.5") அளவில் 2, 3 அல்லது 4 வளைய பைண்டரில் பொருந்த தக்கதாக உள்ளது. இத்தொகுப்பு எளிமையான ஆங்கிலத்தில் ஒரு முழுமையான மேலோட்ட பார்வையாக அமைந்துள்ளது. மேலும் சிறிய குறிப்புரைகளை கொண்ட ஒரு தொகுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் இருந்து சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்துகின்றது, உதாரணமாக இயேசு செய்த அற்புதங்களை பற்றி. இவை பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் போதிப்பதற்குஉதவியாக உள்ளது.

எழுதப்பட்ட உரைகள்

இந்த முழுமையான உரைகள் எளிமையான மொழியில் ஆன்லைனில் கிடைக்கிறது எளிமையான மொழி

இதில் உள்ள இருபது குறுகிய மைய கருத்துக்களை சார்ந்த பாடங்கள் ஒவ்வொன்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 1. கிறிஸ்துவின் பிறப்பு
 2. கிறிஸ்துவின் இறப்பு
 3. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
 4. ஜீவிக்கும் கிறிஸ்து மீண்டும் வருதல்
 5. இழந்துபோனவர்களை தேடிவரும் ஜீவிக்கும் கிறிஸ்து
 6. மரணத்தைவிட வல்லமையான ஜீவிக்கும் கிறிஸ்து
 7. சாத்தானின் மேல் கிறிஸ்துவின் வெற்றி
 8. கிறிஸ்துவே நம் நல்ல மேய்ப்பன்
 9. ஜெபத்தை பற்றி கற்றுதரும் கிறிஸ்து
 10. உலகின் ஒளியானவர்
 11. நாம் தேவனை மகிழச்செய்வது எப்படி
 12. ஜீவனுள்ள கிறிஸ்துவும் மன்னிப்பும்
 13. ஜீவனுள்ள கிறிஸ்துவும் தேவனுடைய வார்த்தையும் பாகம் - 1
 14. ஜீவனுள்ள கிறிஸ்துவும் தேவனுடைய வார்த்தையும் பாகம் - 2
 15. நம்மைப் பற்றி அக்கறைக் கொள்ளும் ஜீவனுள்ள கிறிஸ்து
 16. யார் இந்த இயேசு? - பாகம் 1
 17. யார் இந்த இயேசு? - பாகம் 2
 18. பரலோகத்தின் வழியை காண்பிக்கும் ஜீவிக்கும் கிறிஸ்து
 19. கிறிஸ்த வாழ்க்கையின் வளர்ச்சி
 20. இரட்சிப்பின் வழியை கற்றுத்தரும் ஜீவிக்கும் கிறிஸ்து

இந்த அனைத்து உரைகளும் மொழிப்பெயர்ப்புக்கும் பதிவுசெய்தலுக்கும் ஒரு அடிப்படை வழிகாட்டியாக அமைந்துள்ளது. பலதரப்பட்ட மக்கள் தங்களின் மொழி, கலாச்சாரம், மற்றும் சிந்தனை முறைகளுக்கு பொருந்தும்படி அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சில சொற்களின் பாங்கு மற்றும் கருத்துக்களுக்கு ஒரு முழு விளக்கம் தேவைப்படுகிறது அல்லது வேறுபட்ட கலாச்சாரங்களில் இருந்து நீக்கப்படுகிறது. படங்கள் அடிப்படையிலான கதைகளை சிறந்த முறையில் விளக்குவதற்கு அதற்கேற்ற உள்ளூர் கதைகள் மற்றும் பயன்பாடுகளும் இவ்வுரையில் சேர்க்கப்படலாம்.

வேதாகம சிறுபட தொகுப்பு இந்த CD இல் "ஜீவிக்கும் கிறிஸ்து" மற்றும் " நற்செய்தி" இன்னும் " பார்க்க, கேட்க, வாழ" தொடரிலிருந்தும் அனைத்து படங்களும் உள்ளது. உயர்தர அழுத்தமான கறுப்பு வெள்ளை நிழற்படங்கள் TIFF கோப்புகளில் பிரிண்ட் (up to A4 size at 300 DPI) செய்வதற்கும் மற்றும் நடுத்தர அழுத்தமான வண்ணங்களுடன் கம்ப்யூட்டர் திரை காட்சிக்கு (at 900x600 pixels) அல்லது பிரிண்ட் (up to A7 size at 300 DPI) செய்வதற்கு JPEG கோப்புகளிலும் இருக்கும். குறிப்புரைகளும் மற்ற பிற ஆதார வளங்களும் CD யில் இருக்கும்.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் அறிந்து கொள்ள