"நற் செய்தி" ஆடியோ- காட்சி

நற்செய்தி ஒரு சுவிசேஷ வேதாகம போதனை ஆடியோ -காட்சி. இதில் உலக தோற்றமுதல் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வரையிலான வேதாகமத்தை விரைவான மேலோட்டமாக 20 படங்களுடன் மேலும் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைப் பற்றி கற்பிக்கும் 20 படங்களையும் அளிக்கிறது. இது குறிப்பாக படிப்பறிவு இல்லாத மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியையும் அடிப்படை போதனைகளையும் கொடுப்பதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

போதனை விளக்க காட்சி பற்றி அறியாதவர்களை கூட கவரும் விதத்தில் படங்கள் தெளிவாக பிரகாசமாக வண்ணப் படங்களாக அமைந்துள்ளது. பார்க்க விளக்க உரையும் மாதிரி படங்களும் இங்கே.

ஆடியோ பதிவுகள்

படங்களுடன் இணைந்து இயக்க தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டு இந்த பதிவுகள் 1300 க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. கேள்வி நேரம், கலந்துரையாடல் மற்றும் விளக்கங்கள் இவற்றை பொறுத்து தேவைக்கு ஏற்ப இயக்குதல் இடையிடையே நிறுத்தப்படலாம்.

இப்பதிவுகளில் உள்ளூர் சமூகத்தில் மதிக்கப்படும் தெளிவான குரலில் தாய்மொழி பேச்சாளர்களை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இடையிடையே உள்ளூர் இசை மற்றும் பாடல்கள் படங்களுக்கு இடையில் சேர்க்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு மற்றும் தொடர்பு இவைகள் பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் அறிந்து கொள்ள