கதைசொல்லல் ஏன்?

இவ்வுலகில் வாழ்ந்த எவரிலும் ஆற்றல் மிக்க மிகச்சிறந்த தொடர்பாளராக நம் ஆண்டவராகிய இயேசு விளங்குகிறார். அவர் போதிப்பதற்கு மிக அதிகமாக பயன்படுத்திய வடிவம் கதை சொல்லுதலே ஆகும். தமது செய்தியை விளக்குவதற்காக அன்றாட வாழ்விலிருந்து எடுக்கப்பட்ட உருவகங்கள், கதாபாத்திரங்கள் கொண்ட உவமைக்கதைகள் அவை. இந்த உவமைக்கதைகள் வாயிலாக கேட்கும் மக்கள் உள்ளங்களில்சத்தியத்தை அறிவதற்குரிய ஒரு தாகத்தை உருவாக்கினார்.

இன்றும் கதை சொல்லல் என்பது தேடும் உள்ளங்களை சந்திப்பதற்கு ஆற்றல் மிக்க ஒரு வழியாகவே உள்ளது. கதை சொல்லுவது என்பது மக்கள் உள்ளங்களைத் தூண்டி அவர்களது கற்பனைகளை எழுப்பி அதன் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மறு தலைமுறைக்கு அதிமுக்கியமான தகவல்களை வழிவழியாகத் தெரிவிப்பதற்குச் சக்தி வாய்ந்த சாதனமாக உள்ளது. நாம் கேட்கும் அருளுரைகளில் நாம் பெரிதும் நினைவு கூறுவது அந்த அருளுரையாளர் கூறிய " மூன்று முக்கிய கருத்துக்களை" அல்ல, அவர் பயன்படுத்திய உதாரணக்கதைகளையே!

தொடக்கமுதலே GRN கிறிஸ்துவின் வழிமுறையையே பின்பற்றி வருகிறது. ஆவிக்குரிய சத்தியங்களை எடுத்துரைக்க வேதாகமக் கதைகளையே பயன்படுத்தி அதன் மூலம் எண்ணற்ற அற்புதமான பலன்களைப் பெற்றுள்ளது.

பல்லாண்டுகளுக்கு முன்பாக நாம் நினைவுகூரக்கூடிய ஒரு உதாரணம் நிகழ்ந்தது. ஆப்பிரிக்காவில் உள்ள அப்பர் வோல்டா என்ற இடத்தில் உள்ள ( இப்போது பர்கினா பாசோ ) ஒரு சந்திக்கப்படாத பழங்குடியினரிடத்துக்கு ஒரு அருட்பணித் தம்பதிகள், வேறொரு அருட்பணி இயக்கத்தின் மூலமாக அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் , சந்திக்கப்படாதவர்கள் என்று கருதப்பட்ட இப்பழங்குடியினர் ஏற்கெனவே இயேசுவைப் பற்றி அறிந்திருந்ததைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நமது குழுக்களில் ஒன்று இந்தப் பழங்குடியினருக்காக அவர்களது மொழியில் ஒலிப்பதிவுகளைச் செய்திருந்தது. எந்த அருட்பணியாளரும் அவர்களை வந்தடைவதற்கு முன்பே அம்மக்கள் இந்த ஒலிப்பதிவுகளில் இருந்த எல்லாக் கதைகளையும் மனப்பாடம் செய்து இரட்சிப்புக்கான வழியை இத்தனை ஆண்டுகளாக அறிந்து வைத்திருந்தார்கள்.

இன்றும் மனித வாழ்க்கை வேதாகமக் கதைகளால் ஈர்க்கப்பட்டும் உணர்த்தப்பட்டும் வருகின்றன. இதிலே இப்பணி மிகவும் ஆற்றலுடன் செய்யப்படுவதற்கு வேதாகமக் கதைகள் உள்ளூரைச் சேர்ந்தோரின் குரல்களில், அயல்மொழியினரின் ஒலிப்பு முறைகளால் ஏற்படும் கவனச்சிதறல் இன்றி, சொல்லப்படவேண்டும்.வேதாகமத்தின் பழம்பெரும் கதைகள் உலகமெங்கும் உள்ள ஏராளமான மனித வாழ்க்கையை தொடர்ந்து மாற்றியமைப்பதற்கு வேதாகமக் கதைகள், உள்ளூர் குரல்கள், மற்றும் தேவ மக்களின் ஜெபங்கள் பிரார்த்தனைகள் இவற்றின் இந்தக் கூட்டுக் கலவை மிக மிக உதவும் என்பதில் ஐயமில்லை.

  • Down through the centuries, storytelling has been a most effective way to communicate.

  • Storytelling has always been an effective way to communicate. Jesus used stories or parables when He taught the crowds. For years GRN has followed Christ's method and used storytelling to communicate spiritual truths.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் அறிந்து கொள்ள