இந்த சாபர் என்ற கையினால் இயக்கக்கூடிய டிஜிட்டல் இயக்கி தற்போது உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த திடநிலை சாதனம் மற்றும் கோப்புகளையும் இயக்குகிறது. மின்சாரம் மற்றும் பேட்டரிகள் அதிகவிலையில் அல்லது கிடைக்காத இடங்களில் இந்த கையினால் சுற்றி இயக்கும் திடநிலை சாதனம் பெரிதும் பயனில் உள்ளது.
இதில் ஒலிபெருக்கி, ஒலிபரப்பி, மற்றும் ஒலிப்பெட்டி இருப்பதால் இதை ஒரு நல்ல தரமான குறிப்பிடத்தக்க அளவில் இயக்கி பயன்படுத்தமுடியும்.மக்கள் குழுக்களாக இருக்கும் இடத்தில் சிறந்தமுறையில் பயன்படுத்தப்படுகிறது. இசை மற்றும் செய்திகளும் சமநிலையில் சிறப்பாக அளிக்கப்படுகிறது.
சாபர் உள்ளிருந்து இயக்கும் பேட்டரிகள் மின்திறன் மீண்டும் ரீசார்ஜ் செய்யப்படுபவை. உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஜெனரேட்டர் மூலம் கைப்பிடியை திருப்பி பேட்டரிகள் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. வெளிப்புற மின்திறன் மூலங்கள்/ மின்திறன் தொகுப்பு, சோலார் பேனல்கள், அல்லது பேட்டரிகள் பயன்படுத்தி சாதனத்தை ரீசார்ஜ் செய்யலாம்.
இந்த சாதனத்தை இயக்குவது மிகவும் சுலபம், இதற்கு தொழில்நுட்பம் தெரிந்தவர்களோ படிப்பறிவு பெற்றவர்களோ தேவையில்லை
உள் நினைவகம் அல்லது SD நினைவக கார்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள MP3 மற்றும் WMA வடிவத்தில் உள்ள பதிவுகளை இந்த சாபர் சாதனம் இயக்குகிறது. ஒலி கோப்புகள் USB போர்ட் மூலமாக சாதனத்தில் ஏற்றப்படும். GRN விரும்பிய பதிவுகளை விருப்பம்போல் ஏற்றிக்கொள்ளலாம்.
கையினால் சுற்றி இயக்கக்கூடிய இந்த சாபர் சாதனத்தின் மூலம் GRN பரந்த அனுபவத்தை உருவாக்குகின்றனர். கேசட் இயக்கிகளை விடவும் நம்பக்கூடியதாயும் ஒலிபெருக்க தன்மையும் சிறப்பாக உள்ளது.
இந்த கைசுற்று சாதனம் குறிப்பாக தொலைதூர மக்களுக்கு இயேசுவைப் பற்றி நற்செய்தி சென்றடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. மற்றும் மனிதாபிமான நோக்கம் கொண்ட செயல்களுக்கும் ஏற்றது.