unfoldingWord 09 - தேவன் மோசேயை அழைத்தல்
เค้าโครง: Exodus 1-4
รหัสบทความ: 1209
ภาษา: Tamil
ผู้ฟัง: General
เป้าหมายของสื่อบันทึกเสียง: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
สถานะ: Approved
บทความเป็นแนวทางพื้นฐานสำหรับการแปลและบันทึกเสียงภาษาอื่นๆ ควรดัดแปลงตามความจำเป็นเพื่อให้เข้าใจและเหมาะสมกับวัฒนธรรมและภาษาแต่ละภาษา คำศัพท์และแนวคิดบางคำที่ใช้อาจต้องอธิบายเพิ่มเติม หรือแทนที่ หรือตัดออก
เนื้อหาบทความ
யோசேப்பு மரித்தபின்பு அவனுடைய சொந்தங்கள் மற்றும் அவர்கள் சந்ததி எகிப்து தேசத்தில் அநேக வருடங்கள் இருந்து பலுகிப் பெருகினர். அவர்களே இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்டனர்.
சில நூற்றாண்டுகளுக்கு பிறகு யோசேப்பு எகிப்தில் செய்த நன்மையான செயல்களை எகிப்தியர்கள் மேலும் நினைப்பதாக இல்லை, மாறாக இஸ்ரவேலர்களைப் பார்த்து எகிப்தியர்கள் பயந்தனர் ஏனெனில் இஸ்ரவேலர் மிகவும் பலுகிப் பெருகினர். எனவே அந்நாட்களில் எகிப்தை ஆண்டு வந்த பார்வோன் இஸ்ரவேலர்களை தங்களுக்கு அடிமைகளாக்கினான்.
இஸ்ரவேலர்களை எகிப்தியர்கள் மிகவும் வருத்தி, அநேக கட்டிடங்களையும், நகரங்களையும் கட்டும்படி மிகவும் கடினமான வேலைகளை செய்ய வைத்ததினால், அவர்களுடைய வாழ்க்கை கொடியதாய் இருந்தது, ஆனால் தேவன் அவர்களை ஆசீர்வதித்ததினால் அவர்கள் மேலும் பலுகிப் பெருகினர்.
இஸ்ரவேலர்கள் பலுகிப் பெருகுவதினால், பார்வோன் அவர்களுடைய ஆண் குழந்தைகளை நயல் நதியில் வீசி கொன்று போடும்படி தன்னுடைய ஜனங்களுக்குக் கட்டளையிட்டான்.
குறிப்பிட்ட ஒளித்து வைத்தனர்.
பிள்ளையின் பெற்றோர் தங்களுடைய ஆண் பிள்ளையை ஒளித்து வைக்க முடியாமல், யாரும் கொன்று போடாமல் பாதுக்கக்க, ஒரு மிதக்கும் கூடையில் அந்தக் குழந்தையை வைத்து, நயல் நதியில் விட்டுவிட்டனர். அந்தக் குழந்தையினுடைய மூத்த சகோதரி என்ன நடக்கும் என்று கவனித்துக் கொண்டிருந்தாள்.
பார்வோனுடைய குமாரத்தி அந்தக் கூடையில் இருந்த குழந்தையைக் கண்டு அதை தன்னுடைய குழந்தையாக ஏற்று, அந்தக் குழந்தையை கவனிக்கும்படி ஒரு இஸ்ரவேல் பெண்மணியை அந்தக் குழந்தையின் தாய் என்று அறியாமல், பராமரிக்கும்படி செய்தாள். அந்தக் குழந்தை பால் மறந்தவுடன், பார்வோனின் குமாரத்தியினிடத்தில் ஒப்புவித்தாள். இவளே அந்தக் குழந்தைக்கு மோசே என்று பேரிட்டாள்.
மோசே வளர்ந்து பெரியவனானபோது, அடிமையாகிய இஸ்ரவேலனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதைக் கண்டு அவனை காப்பாற்ற முயன்றான்.
மோசே எகிப்தியனைக் கொன்று புதைத்ததை ஒருவரும் பார்க்கவில்லை என்று நினைத்தான், ஆனால் அதை ஒரு எகிப்தியன் பார்த்தான்.
மோசேயின் செயலை பார்வோன் கேள்விப்பட்டு, அவனைக் கொன்று போடும்படி நினைத்தான், ஆனால் மோசே எகிப்திலிருந்து வனாந்திரத்திற்கு ஓடிப்போனான். பார்வோனின் சேவகர்களால் மோசேயைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எகிப்திலிருந்து வெகு தூரமான வனாந்திரத்தில் மோசே ஆடுகளை மேய்க்கிறவனானான், அங்கே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து,அங்கே மோசைக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.
மோசே தன் மாமனாரின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில், எரிகிற தணலை பார்த்தான். அது எரிகையில் தணல் வெந்து போகாமலிருந்தது. அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் சென்றான், உன்னுடைய செருப்பை கழற்று, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்று தேவன் அவனோடு பேசினார்.
மோசேயினிடத்தில் தேவன், நான் இஸ்ரவேலருடைய உபத்திரவத்தைப் பார்த்தேன். அவர்களை விடுவிக்கும்படி உன்னைப் பார்வோனிடத்திற்கு அனுப்புவேன், நீ எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்பாய். நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்கு வாக்குப்பண்ணின காணன் தேசத்தை அவர்களுக்குத் தருவேன் என்று சொன்னார்.
ஜனங்கள் யார் என்னை அனுப்பினார்? என்று கேட்டால் நான் என்ன சொல்லவேண்டும் என்று மோசே தேவனிடத்தில் கேட்டான். அதற்கு தேவன், இருக்கிறவராக இருக்கிறேன். இருக்கிறேன் என்கிறவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்றும், நான் யேகோவா, உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தேவன். இதுவே தலைமுறைதோறும் என்னுடைய நாமம் என்று சொல்லும்படி கூறினார்.
என்னால் நன்றாய் பேச முடியாது என்று நினைத்து, பார்வோனிடம் போக மோசே பயந்தான், எனவே தேவன் அவனுக்கு உதவும்படி அவனுடைய சகோதரனாகிய ஆரோனை அனுப்பினார்.