unfoldingWord 02 - உலகத்தில் பாவம் நுழைதல்
เค้าโครง: Genesis 3
รหัสบทความ: 1202
ภาษา: Tamil
หัวข้อ: Sin and Satan (Sin, disobedience, Punishment for guilt)
ผู้ฟัง: General
เป้าหมายของสื่อบันทึกเสียง: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
สถานะ: Approved
บทความเป็นแนวทางพื้นฐานสำหรับการแปลและบันทึกเสียงภาษาอื่นๆ ควรดัดแปลงตามความจำเป็นเพื่อให้เข้าใจและเหมาะสมกับวัฒนธรรมและภาษาแต่ละภาษา คำศัพท์และแนวคิดบางคำที่ใช้อาจต้องอธิบายเพิ่มเติม หรือแทนที่ หรือตัดออก
เนื้อหาบทความ
ஆதாம் மற்றும் அவனுடைய மனைவியும் தேவன் உண்டாக்கிய தோட்டத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். அந்த உலகத்தில் பாவம் இல்லாததினால் அவர்கள் நிர்வாணிகளாயிருந்தும், தாங்கள் நிர்வாணிகள் என்பதை உணராதிருந்தார்கள். அவர்கள் தோட்டத்தில் உலாவுகிறவர்களகவும், தேவனோடு பேசுகிறவர்களாகவும் இருந்தனர்.
தோட்டத்தில் இருந்த மிகவும் தந்திரமாய் அந்த ஸ்திரீயினினிடத்தில், இந்த தோட்டத்தில் உள்ள சகல கனியையும் சாப்பிட வேண்டாம் என்று தேவன் சொன்னாரோ? என்று கேட்டது.
அதற்கு அந்த ஸ்திரீ, எல்லா மரத்தின் கனியையும் நாங்கள் சாப்பிடலாம் ஆனால் நன்மை, தீமை அறியத்தக்க அந்த மரத்தின் கனியை மட்டும் சாப்பிட வேண்டாம் என்றும், அந்த கனியை சாபிட்டாலோ அல்லது அதைத் தொட்டாலோ நாங்கள் சாவோம் என்று தேவன் கூறினார் என்றாள்.
அப்பொழுது பாம்பு அந்த பெண்ணிடத்தில், அப்படியல்ல! நீங்கள் சாவதில்லை. அந்த கனியை சாப்பிட்டவுடனே நன்மை, தீமை அறிந்து தேவனைப்போல் இருப்பீர்கள் என்று தேவன் அறிவார் என்றது
அந்த கனி ஸ்திரியின் பார்வைக்கு இன்பமும், புசிப்புக்கு ருசியனடயிருந்தது. அவள் புத்தி தெளியவும் விரும்பினபடியால், அதின் கனிகளை பறித்து சாப்பிட்டு, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் அதை சாப்பிட்டான்.
உடனே அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு, தாங்கள் நிர்வாணமாய் இருப்பதை உணர்ந்தார்கள். அவர்கள் அத்தி இலைகளினால் ஆடை உண்டாக்கி த ங்கள் உடலை மூடினார்கள்.
பின்பு ஆதாமும் அவன் மனைவியும் தோட்டத்தில் உலாவுகிற தேவனுடைய சத்தத்தை கேட்டார்கள், அதினால் தாங்கள் ஒளிந்து கொண்டார்கள். பின்பு தேவன், ஆதாமை கூப்பிட்டு, நீ எங்கே இருக்கிறாய் என்றார்? அதற்கு ஆதாம், நீர் தோட்டத்தில் லாவுகிற சத்தத்தை நான் கேட்டு, நான் நிர்வாணமாய் இருப்பதினால் பயந்து ஒளிந்துகொண்டேன் என்றான்.
அதற்கு தேவன், நீ நிர்வாணியாய் இருக்கிறாய் என்று உனக்கு அறிவித்தவன் யார்? நான் சாப்பிட வேண்டாம் என்று உனக்கு சொன்ன கனியை நீ சாப்பிட்டாயோ என்றார்? அதற்கு அவன், நீர் எனக்குத் தந்த இந்த ஸ்திரீ எனக்கு அந்த கனியை கொடுத்தாள், நான் அதை சாப்பிட்டேன் என்றான். பின்பு தேவன் அந்த ஸ்திரீயைப் பார்த்து, ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டார். அதற்கு அவள், பாம்பு என்னை வஞ்சித்தது என்றாள்.
தேவன் அந்தப் பாம்பினிடத்தில், நீ சபிக்கப்பட்டிருப்பாய்! நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் என்றார். உனக்கும் க்கும், உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன். அவன் உன் தலையை நசுக்குவார், நீ அவன் நசுக்குவாய் என்றார்.
பின்பு தேவன் அந்த ஸ்தியினிடத்தில், நான் உன் கர்ப்பவேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆளுவான் என்றார்.
தேவன் ஆதாமை நோக்கி, நீ உன் மனைவியின் வார்த்தையைக் கேட்டு, எனக்குக் கீழ்படியாதபடியினால், பூமி சபிக்கப்பட்டிருக்கும், நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்ததோடே அதின் பலனை சாப்பிடுவாய். பின்பு நீ மரித்து, உன்னுடைய உடல் மண்ணுக்குத் திரும்பும் என்றார். ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான், ஏனெனில் அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள். பின்பு தேவன் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் விலங்குகளின் தோலினால் உடைகளை உடுத்தினார்.
பின்பு தேவன், இதோ மனிதன் நன்மை, தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான், அவர்கள் ஜீவவிருட்சத்தின் கனியை சாப்பிட்டு, என்றென்றைக்கும் உயிரோடிராதபடிக்கு, ஆதமையும், ஏவாளையும், தோட்டத்திலிருந்து தேவன் வெளியே அனுப்பிவிட்டார். பின்பு ஒருவரும் ஜீவவிருட்சத்தின் கனியை சாப்பிடாதபடிக்கு வல்லமையான தூதர்களை தோட்டத்தின் வழியில் காவல் வைத்தார்.