unfoldingWord 30 - ஐயாயிரம் பேருக்கு இயேசு உணவு கொடுத்தல்

சுருக்கமான வருணனை: Matthew 14:13-21; Mark 6:31-44; Luke 9:10-17; John 6:5-15
உரையின் எண்: 1230
மொழி: Tamil
சபையினர்: General
செயல்நோக்கம்: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
நிலை: Approved
இந்த விரிவுரைக்குறிப்பு பிறமொழிகளின் மொழிபெயர்ப்பிற்கும் மற்றும் பதிவு செய்வதற்கும் அடிப்படை வழிகாட்டி ஆகும். பல்வேறு கலாச்சாரங்களுக்கும் மொழிகளுக்கும் பொருத்தமானதாக ஒவ்வொரு பகுதியும் ஏற்ற விதத்தில் இது பயன்படுத்தப்படவேண்டும்.சில விதிமுறைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் ஒரு விரிவான விளக்கம் தேவைப்படலாம் அல்லது வேறுபட்ட கலாச்சாரங்களில் இவை தவிர்க்கப்படலாம்.
உரையின் எழுத்து வடிவம்

இயேசு அவருடைய சீஷர்களை, வெவ்வேறு கிராமங்களில் இருக்கும் ஜனங்களுக்கு பிரசங்கிக்கும்படி அனுப்பினார். அவர்கள் அதை முடித்துத் திரும்பி இயேசு இருக்கும் இடத்திற்கு வந்து, தாங்கள் செய்தவைகளை அவருக்கு சொன்னார்கள். பின்பு கொஞ்ச தூரத்தில் இருந்த ஏரிக்கு அந்தப் பக்கத்தில் ஒரு இடத்திற்கு ஓய்வு எடுக்க சீஷர்களை படகில் அழைத்துக் கொண்டு போனார்.

ஆனால் இயேசுவும் அவருடைய சீஷர்களும் படகில் போகிறதைப் பார்த்த ஜனங்கள், அவர்களுக்கு முன்பாக அக்கரையில் சேர ஏரியில் வேகமாக ஓடினார்கள். அதினால் இயேசுவும் அவருடைய சீஷர்களும், அக்கரையில் சேர்ந்தபோது அங்கே அநேக ஜனங்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

பெண்களையும் குழந்தைகளையும் தவிர ஏறக்குறைய 5,௦௦௦ ஆண்கள் அங்கே இருந்தனர். மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல அந்த ஜனங்கள் இருப்பதை இயேசு பார்த்து, அவர்கள்மேல் மனமிரங்கி, அவர்களுக்கு போதிக்கவும், அவர்களுடைய வியாதிகளை சுகமாக்கவும் செய்தார்.

சாயங்காலம் ஆனபோது, சீஷர்கள் இயேசுவினிடத்தில், நேரமாயிற்று, பக்கத்தில் ஊர்களும் இல்லை, எனவே அவர்கள் சாப்பிடும்படிக்கு, ஏதாவது வாங்கும்படி அவர்களை அனுப்பும்படி கேட்டார்கள்.

ஆனால் இயேசு சீஷர்களிடத்தில், நீங்கள் ஜனங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள், நாங்கள் எப்படி கொடுக்க முடியும்? எங்களிடத்தில் ஐந்து அப்பமும், இரண்டு சிறு மீன்கள் மட்டுமே இருக்கிறது என்றார்கள்.

இயேசு சீஷர்களிடத்தில், ஜனங்களை ஐம்பது, ஐம்பது பேராக, புல்லின்மேல் உட்காரவைக்கும்படி சொன்னார்.

பின்பு இயேசு அந்த ஐந்து அப்பத்தையும், இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தைப் பார்த்து, அந்த உணவிற்காக தேவனுக்கு நன்றி சொன்னார்.

பின்பு இயேசு அந்த அப்பத்தையும், மீனையும் பியித்து, சீஷர்களிடம் கொடுத்து, ஜனங்களுக்கு பரிமாறும்படி சொன்னார். அவர்கள் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். உணவு தீரவே இல்லை. எல்லோரும் திருப்தியாக சாப்பிட்டார்கள்.

அதற்கு பின்பு, எல்லோரும் சாப்பிட்டப்பின் மீதியாக, பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தார்கள். அது ஐந்து அப்பமும், இரண்டு மீன்களிலிருந்து மீதியானது.