unfoldingWord 25 - இயேசுவை பிசாசு சோதித்தல்
रुपरेषा: Matthew 4:1-11; Mark 1:12-13; Luke 4:1-13
स्क्रिप्ट क्रमांक: 1225
इंग्रजी: Tamil
प्रेक्षक: General
शैली: Bible Stories & Teac
उद्देश: Evangelism; Teaching
बायबल अवतरण: Paraphrase
स्थिती: Approved
स्क्रिप्ट हे इतर भाषांमध्ये भाषांतर आणि रेकॉर्डिंगसाठी मूलभूत मार्गदर्शक तत्त्वे आहेत. प्रत्येक भिन्न संस्कृती आणि भाषेसाठी त्यांना समजण्यायोग्य आणि संबंधित बनविण्यासाठी ते आवश्यकतेनुसार स्वीकारले जावे. वापरलेल्या काही संज्ञा आणि संकल्पनांना अधिक स्पष्टीकरणाची आवश्यकता असू शकते किंवा अगदी बदलली किंवा पूर्णपणे वगळली जाऊ शकते.
स्क्रिप्ट मजकूर
இயேசு ஸ்நானம் எடுத்து முடிந்ததும், பரிசுத்த ஆவியானவரால் வனாந்திரத்திற்கு நடத்தப்பட்டார். அங்கே, இயேசு நாற்பது நாள் இரவும், பகலும் உபவாசமாய் இருந்தார். இயேசுவை பாவம் செய்யும்படி சோதிக்க சாத்தான் வந்தான்.
முதலில் சாத்தான், இயேசுவினிடத்தில், நீர் தேவனுடைய மகனாயிருந்தால், இந்த கற்களை அப்பமாக மாற்றி சாப்பிட வேண்டும் என்றான்.
அதற்கு இயேசு, மனிதன் வாழ்வதற்கு அப்பம் மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் வேண்டும் என்று தேவனுடைய வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது என்று சாத்தானிடம் சொன்னார்.
பின்பு சாத்தான், இயேசுவை தேவாலயத்தின் உச்சிக்கு கொண்டுபோய், நீர் தேவனுடைய மகனாயிருந்தால், இங்கேயிருந்து கீழே குதிக்க வேண்டும். ஏனெனில், பாதம் கல்லில் படாதபடி, தேவன் தூதர்களை வைத்து காப்பாற்றுவார் என்று எழுதியிருக்கிறது என்று சாத்தான் சொன்னான்.
ஆனால் இயேசு, சாத்தானுடைய சொல்லைக் கேளாமல், தேவனாகிய ஆண்டவரை சோதிக்கக் கூடாது என்று தேவன் சொல்லியிருக்கிறார் என்றார்.
பின்பு சாத்தான், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும், அதிலுள்ள எல்லா மேன்மையையும், அதிகாரங்களையும் இயேசுவுக்கு காண்பித்து, கீழே விழுந்து என்னை வணங்கினால், இவைகள் எல்லாவற்றையும் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
அதற்கு இயேசு, அந்தபக்கம் போ, சாத்தானே! தேவனாகியகர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்து, அவர் ஒருவரையே கனம்பண்ணுவாயாக என்று தேவனுடைய வார்த்தையில் ஜனங்களுக்குக் கட்டளையிடப்படிருக்கிறது என்றார்.
சாத்தானுடைய சோதனையில் இயேசு விழாததினால், சாத்தான் அவரை விட்டுப் போய்விட்டான். பின்பு தேவதூதர்கள் வந்து, இயேசுவுக்கு சேவை செய்தனர்.