unfoldingWord 35 - கருணையுள்ள தகப்பனின் கதை

Тойм: Luke 15
Скриптийн дугаар: 1235
Хэл: Tamil
Үзэгчид: General
Зорилго: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
Статус: Approved
Скрипт нь бусад хэл рүү орчуулах, бичих үндсэн заавар юм. Тэдгээрийг өөр өөр соёл, хэл бүрт ойлгомжтой, хамааралтай болгохын тулд шаардлагатай бол тохируулсан байх ёстой. Ашигласан зарим нэр томьёо, ухагдахууныг илүү тайлбарлах шаардлагатай эсвэл бүр орлуулах эсвэл бүрмөсөн орхиж болно.
Скрипт Текст

ஒருநாள் இயேசுவிடம் அவருடைய பிரசங்கத்தைக் கேட்கும்படி வந்த அநேகரிடத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவர்களில் வரி வசூலிப்பவர்களும், மோசேயின் நியாப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியாதவர்களும் இருந்தார்கள்.

இயேசு அவர்களோடு நண்பர்களிடத்தில் பேசுவது போல பேசினதை சில மதத் தலைவர்கள் பார்த்ததும், மற்றவர்களிடத்தில், அவர் தவறு செய்கிறார் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இயேசு அதைக் கேட்டு, அவர்களுக்கு ஒரு கதையை சொன்னார்.

ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களில் இளையவன் தன் தகப்பனிடத்தில், என்னுடைய சொத்தின் பாகத்தை இப்போது தரவேண்டும் என்று கேட்டான். எனவே தகப்பன் அவர்கள் இருவரின் சொத்து பாகத்தையும் பிரித்தார்.

உடனே அந்த இளைய மகன் தனக்கு வரும் சொத்தின் எல்லா பாகத்தையும் எடுத்துக் கொண்டு, தூர தேசத்திற்கு போய், தவறான வழியில் அவனுடைய எல்லா பணத்தையும் செலவு செய்தான்.

அதற்கு பின்பு, அந்த இளைய மகன் இருந்த ஊரில் பஞ்சம் உண்டானதினால், சாப்பாடு வாங்ககூட பணம் இல்லாததினால், பன்றி மேய்க்கும் வேலை மட்டும் கிடைத்ததினால், அந்த வேலை செய்து, அவனுக்கு மிகவும் பசி உண்டானதில், அந்த பன்றியின் உணவை சாப்பிட விரும்பினான்.

கடைசியாக, இளைய மகன் அவனுக்குள், நான் இங்கு என்ன செய்கிறேன்? என்னுடைய தகப்பனிடம் வேலை செய்பவர்களுக்குகூட சாப்பிட நிறைய உணவு இருக்கிறது. நான் ஏன் உணவுக்காக இங்கு கஷ்டப்பட வேண்டும். நான் திரும்ப என் தகப்பனிடத்தில் போய், அவர் வேலைக்காரர்களில் ஒருவனாக இருப்பேன் என்று சொல்லிக்கொண்டான்.

பின்பு தன் தகப்பனின் வீட்டிற்கு புறப்பட்டான். அவன் தூரத்தில் வந்துகொண்டிருக்கும்போது, அவனுடைய தகப்பன் அவனைப் பார்த்து, அவன்மேல் மனதுருகி, அவனிடத்தில் ஓடி, அவனைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டான்.

மகன் அப்பாவைப் பார்த்து, நான் உமக்கும், தேவனுக்கும் விரோதமாய் பாவம் செய்தேன். உம்முடைய மகன் என்று சொல்ல எனக்குத் தகுதியில்லை என்றான்.

ஆனால் தகப்பன் தன் வேலைக்கரரில் ஒருவனிடத்தில், சீக்கிரமாய் போய், நல்ல துணியை எடுத்துக் கொண்டுவந்து என் மகனுக்கு போட்டுவிடு! அவனுடைய விரலில் மோதிரத்தையும், அவனுடைய கால்களில் செருப்பையும் போடு என்றான். மேலும் கொளுத்த கன்றை அடித்து, விருந்து செய். ஏனென்றால், என்னுடைய மகன் மரித்தான், இப்போது உயிரோடு இருக்கிறான்! அவன் காணமற்போனான், இப்போது நமக்கு கிடைத்தான்! என்றான்.

எனவே அவர்கள் சந்தோஷமாய் இருந்தார்கள். அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த மூத்த மகன் வந்து, அங்கே கேட்ட நடனம் மற்றும் இசையின் சத்தத்தைக்கேட்டு, என்ன நடக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை.

அவர்கள் இளைய மகன் திரும்பி வந்ததினால் சந்தோஷமாய் இருக்கிறதை அறிந்த மூத்த மகன் மிகவும் கோபமடைந்து, வீட்டிற்க்குள் போகவில்லை. அவனுடைய தகப்பன் வெளியே வந்து, அவர்களோடு சந்தோஷமாய் இருக்கும்படி உள்ளே அழைத்தான், ஆனால் அவன் போகவில்லை.

மூத்த மகன் அப்பாவினிடத்தில், இவ்வளவு வருடங்கள் நான் உமக்கு உண்மையாய் வேலை செய்தேன்! உம்முடைய வார்த்தையை மீறவில்லை, அப்படியிருந்தும் நான் என் நண்பர்களோடு சந்தோஷமாய் இருக்கும்படி நீர் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியை கூட தரவில்லை. ஆனால் தவறான வழியில் எல்லாவற்றையும் செலவு செய்த உம்முடைய மகன் திரும்ப வந்ததும், சந்தோஷமாய் இருக்கும்படி, கொளுத்த கன்றை கொடுத்தீரே என்றான்.

அதற்கு தகப்பன், என் மகனே. நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், என்னிடத்தில் இருக்கிறதெல்லாம் உனக்குத்தான். ஆனால் உன்னுடைய தம்பி, மரித்தான், இப்போது உயிரோடு இருக்கிறான்! அவன் காணமற்போனான், இப்போது நமக்கு கிடைத்தான்! எனவே நாம் சந்தோஷமாய் இருக்க வேண்டா என்றான்.