unfoldingWord 47 - பிலிப்புவில் பவுலும் சீலாவும்

개요: Acts 16:11-40
스크립트 번호: 1247
언어: Tamil
청중: General
목적: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
지위: Approved
이 스크립트는 다른 언어로 번역 및 녹음을위한 기본 지침입니다. 그것은 그것이 사용되는 각 영역에 맞게 다른 문화와 언어로 조정되어야 합니다. 사용되는 몇 가지 용어와 개념은 다른 문화에서는 다듬어지거나 생략해야 할 수도 있습니다.
스크립트 텍스트

ரோமாபுரி எங்கும் சவுல் பிரயாணம் செய்ததினால், அவன் ரோம பெயர் பவுல் என்பதை பயன் படுத்தினான். ஒருநாள் பவுலும் சீலாவும் பிலிப்பியில், ஆறுக்கு பக்கத்தில் இருந்த ஒரு நகரத்தில் ஜனங்கள் ஜெபிக்கும்படி கூடியிருந்ததினால் அங்கே அவர்கள் போனார்கள். அங்கே அவர்கள் லீதியாள் என்னும் ஒரு வியாபாரியை சந்தித்தார்கள். அவள் தேவனை நேசித்து, ஆராதித்தாள்.

லீதியாள் இயேசுவின் செய்தியை கேட்டு, அதை ஏற்றுக் கொள்ளும்படி தேவன் உதவினார். பவுலும் சீலாவும் அவளுக்கும் அவளுடைய குடும்பத்தாருக்கும் ஸ்நானம் கொடுத்தார்கள், பின்பு அவள் அவர்களை வீட்டிற்குத் தங்கும்படி அழைத்தாள். எனவே பவுலும் சீலாவும் அங்கே தங்கினார்கள்.

யூதர்கள் ஜெபிக்கும் இடத்தில் தான் பவுலும் சீலாவும் அதிகமாய் ஜனங்களை சந்தித்தார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் நடந்து போகும் போது, பிசாசு பிடித்திருந்த ஒரு அடிமைப் பெண் அவர்களைப் பின் தொடர்ந்தாள். ஏனென்றால் அவள் ஜனங்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தை சொல்லி, அதிக பணம் சம்பாதித்து வந்தாள். அதாவது குறிச் சொல்லுவதில் கில்லாடி.

அந்த அடிமைப் பெண் அவர்கள் நடக்கும் போது, இவர்கள் உன்னதமான தேவனுடைய வேலைக்காரர்கள் என்று சொல்லி, நீங்கள் இரட்சிக்கபடுவதற்கு ஏதுவான வழியை போதிக்கிறார்கள் என்று சொன்னாள். அவள் எப்போதும் இப்படி சொல்லிக் கொண்டிருந்ததினால் பவுல் கோபமடைந்தான்.

கடைசியாக ஒருநாள், அந்த அடிமைப் பெண் அப்படி சொல்ல ஆரம்பித்தாள், உடனே பவுல் திரும்பி, அவளைப் பார்த்து இயேசுவின் நாமத்தில் பொல்லாத ஆவியே வெளியே வா என்று சொன்னான். அந்த நிமிடமே அந்த ஆவி அவளை விட்டுப் போனது.

அந்த பெண்ணை அடிமையாக வைத்திருந்தவர்கள். அசுத்த ஆவி இல்லாமல் அவள் குறிச் சொல்ல முடியாது என்று அறிந்து கொண்டார்கள். ஏனெனில் அவள் இனிமேல் நடக்கப் போவதை சொல்லி யாரிடமும் பணம் வாங்க முடியாது என்பதை அவளை அடிமையாய் வைத்திருந்தவர்கள் அறிந்து மிகவும் கோபமடைந்தார்கள்.

எனவே அந்த அடிமைப் பெண்ணின் உரிமையாளர் பவுலையும் சீலாவையும் ரோமர்களின் அதிகாரியிடம் கூட்டிக் கொண்டு போனார்கள். அவர்கள் பவுலையும் சீலாவையும் அடித்து, சிறையில் அடைத்தனர்.

அவர்கள் சிறையின் காவல்காரர்கள் அதிகம் இருந்த ஒரு பகுதியில் பவுலையும் சீலாவையும் வைத்து, அவர்களுடைய கால்களையும் பெரிய மரக்கட்டையால் செய்யப்பட்ட ஒரு பொருளினால் பூட்டினார்கள். ஆனாலும் நடு இரவில் பவுலும் சீலாவும் தேவனை துத்தித்துப் பாடினார்கள்.

உடனே, நில நடுக்கம் உண்டாயிற்று! சிறைச்சாலையின் எல்லா கதவுகளும் நன்றாகத் திறந்தது. மேலும் எல்லா கைதிகளின் சங்கிலிகளும் கழன்று விழுந்தது.

பின்பு சிறைச்சாலையின் அதிகாரி எழுந்து, சிறைச்சாலையில் எல்லா கதவுகளும் திறந்திருக்கிறதைப் பார்த்து, எல்லா கைதிகளும் தப்பித்து போயிருப்பார்கள். அவர்களைப் போக விட்டதினால், ரோம அதிகாரிகள் அவனைக் கொன்று போடுவார்கள் என்று பயந்து, அவன் தற்கொலை செய்ய முயன்றான்! ஆனால் பவுல் அதைப் பார்த்து, சத்தமிட்டு. நிறுத்து! ஒன்றும் செய்யாதே, நாங்கள் எல்லோரும் இங்கே தான் இருக்கிறோம் என்றான்.

அந்த சிறைச்சாலையின் அதிகாரி நடுக்கத்தோடு பவுலையும் சீலாவையும் பார்த்து, நான் இரட்சிக்கபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அதற்கு பவுல், இயேசுவே ஆண்டவர் என்று நீயும் உன் குடும்பமும் நம்பினால் இரட்சிக்கபடுவீர்கள் என்றான். பின்பு அந்த சிறைச்சாலையின் அதிகாரி பவுலையும் சீலாவையும் அவனுடைய வீட்டிற்க்கு கூட்டிக் கொண்டு போய் அவர்களுடைய காயங்களுக்கு மருந்து போட்டான். அதற்கு பின்பு பவுல் அந்த வீட்டில் இருந்த யாவருக்கும் இயேசுவின் நற்செய்தியை பிரசங்கித்தான்.

அந்த சிறைச்சாலையின் அதிகாரியும் அவன் குடும்பம் முழுவதும் இயேசுவை விசுவாசித்தனர். எனவே பவுலும் சீலாவும் அவர்களை ஸ்நானம் பண்ணினர், பின்பு அவர்களுக்கு சாப்பி கொடுத்து, அவர்கள் எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாயிருந்தார்கள்.

அடுத்த நாள் தலைவர்கள் பவுலையும் சீலாவையும் சிறையிலிருந்து விடுதலை பண்ணி, அந்த பிலிப்பி நகரத்தை விட்டுப் போகும்படி சொன்னார்கள். பவுலும் சீலாவும் போய் லீதியாளையும், அவர்களுடைய நண்பர்களையும் சந்தித்து விட்டு, அந்த நகரத்தை விட்டு போனார்கள். இயேசுவின் நற்செய்தி தொடர்ந்து பெருகி, சபையும் வளர்ந்து கொண்டிருந்தது.

பவுலும் மற்ற கிருஸ்தவ தலைவர்களும் அநேக நகரங்களுக்கு போய், இயேசுவைக்குறித்த நற்செய்தியை பிரசங்கம் செய்து, போதிக்கவும் செய்தனர். மேலும் அவர்கள் சபைகளையும் விசுவாசிகளையும் ஊக்குவிக்கும்படி அநேக கடிதங்களை எழுதினார்கள். அதில் சில கடிதங்கள் வேதாகமத்தின் புத்தகங்களாகவும் இருக்கின்றது.