unfoldingWord 19 - தீர்கத்தரிசிகள்
개요: 1 Kings 16-18; 2 Kings 5; Jeremiah 38
스크립트 번호: 1219
언어: Tamil
청중: General
목적: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
지위: Approved
이 스크립트는 다른 언어로 번역 및 녹음을위한 기본 지침입니다. 그것은 그것이 사용되는 각 영역에 맞게 다른 문화와 언어로 조정되어야 합니다. 사용되는 몇 가지 용어와 개념은 다른 문화에서는 다듬어지거나 생략해야 할 수도 있습니다.
스크립트 텍스트
இஸ்ரவேலில் தேவன் தீர்க்கத்தரிசிகளை அனுப்பிக் கொண்டே இருந்தார். தேவன் சொல்லும் காரியங்களைத் தீர்க்கத்தரிசிகள் ஜனங்களிடம் சொன்னார்கள்.
ஆகாப் இஸ்ரவேலில் ராஜாவயிருந்தபோது எலியா என்னும் ஒரு தீர்க்கத்தரிசி இருந்தான். ஆகாப் கெட்டவன். அவன் ஜனங்களைப் பொய்யான தெய்வமான பாகாலை வணங்கும்படிச் செய்தான். எனவே தேவன் ஜனங்களைத் தண்டிக்கப் போவதாகஎலியா ராஜாவாகிய ஆகாபிடம் சொன்னான் அதாவது, நான் சொல்லும்வரை இஸ்ரவேலில் மழையோ, பனியோ பெய்வதில்லை என்றான். இதைக் கேட்ட ஆகாப் கோபமடைந்து, எலியாவை கொல்லும்படி நினைத்தான்.
எனவே தேவன் எலியாவிடம் வனாந்திரத்திற்குப் போய் ஆகாபிடமிருந்து ஒளிந்து கொள்ளும்படி சொன்னார். வனாந்திரத்தில், தேவன் காண்பித்த ஒரு ஓடையினருகே எலியா இருந்தான். ஒவ்வொருநாள் காலையிலும் மாலையிலும், அப்பமும், இறைச்சியும் பறவைகள் எலியாவுக்கு கொண்டு வரும். அந்த சமயத்தில் ஆகாபும், அவனுடைய இராணுவமும் எலியாவை தேடியும் காணவில்லை.
மழை இல்லாததினால் அந்த ஓடையில் தண்ணீர் நின்று போயிற்று. எனவே எலியா அருகில் இருந்த ஒரு தேசத்திற்கு போனான். அங்கே ஏழை விதவை தன் மகனுடன் இருந்தாள். அங்கேயும் பஞ்சம் உண்டானதினால் உணவு இல்லாதிருந்தது. ஆனாலும் அந்த விதவை எலியாவை போஷித்தாள், எனவே தேவன் அவளுக்கும் அவளுடைய பிள்ளைக்கும் பானையில் மாவும், ஜாடியில் எண்ணெயும் குறையாதபடி செய்தார். பஞ்சகாலம் முழுவதும் அவர்களுக்கு ஆகாரம் உண்டாயிருந்தது. எலியா அங்கே அநேக வருடங்கள் தங்கியிருந்தான்.
மூன்றரை வருடங்கள் கழித்து, தேவன் இஸ்ரவேல் தேசத்தில் திரும்பவும் மழையைப் பெய்யப்பண்ணுவேன் என்றும் எலியாவை ஆகாபினிடத்தில் போய் பேசும்படி சொன்னார். எனவே எலியா போனான். ஆகாப் எலியாவைப் பார்த்து, பிரச்சனைப் பண்ணுகிறவனே! என்றான். அதற்கு எலியா, நான் அல்ல நீரே பிரச்சனைப் பண்ணுகிறீர்!! நீர் தேவனுக்கு விரோதமாய் பாகாலை வணங்குகிறீர். யேகோவா தான் மெய்யான தெய்வம். நீர் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரையும் கர்மேல் பர்வதம் வரும்படிச் செய்யும் என்றான்.
எனவே இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் கர்மேல் பர்வதம் வந்தனர். அவர்களோடுக்கூட பாகலைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தவர்களும் வந்தனர். இவர்களே பாகால் தீர்க்கத்தரிசிகள். அவர்கள் மொத்தம் 45௦ பேர்கள். எலியா அவர்களைப் பார்த்து, எவ்வளவு நாட்கள் உங்களுடைய சிந்தையில் குழப்பத்தோடு இருப்பீர்கள். யேகோவா தெய்வமானால் அவரை வணங்குங்கள்! இல்லை, பாகால் தெய்வமானால் அதை வணங்குங்கள்! என்றான்.
பின்பு எலியா பாகால் தீர்கத்தரிசிகளைப் பார்த்து, காளையை வெட்டி, பலிபீடத்தின்மேல் பலியிடும்படி வையுங்கள். தீ பற்ற வேண்டாம், பின்பு நானும் வேறொரு பலிபீடத்தின்மேல் அப்படியே செய்வேன். எந்த தேவன் தீயை பலிபீடத்தின்மேல் வரும்படிச் செய்கிறாரோ அவரே உண்மையான தேவன் என்றான். எனவே பாகாலின் தீர்கத்தரிசிகள் பலிபீடத்தின்மேல் தீ பற்றவைக்காமல் எல்லாவற்றையும் செய்தனர்.
பின்பு பாகால் தீர்கத்தரிசிகள் பாகாலிடம் ஜெபித்தனர். பாகால் செவிகொடு! என்று நாள் முழுதும் சத்தம் போட்டு, அவர்கள் உடலை கத்தியால் கீறிக்கொண், ஆனாலும் பாகால் பதில் தரவில்லை. தீயும் அனுப்பவில்லை.
பாகால் தீர்கத்தரிசிகள் ஏறக்குறைய நாள் முழுவதும் பாகாலிடம் ஜெபித்தனர். ஜெபித்து முடித்தப் பின்பு, எலியா தேவனுக்கென்று வேறொரு காளையை பலிபீடத்தின்மேல் வைத்தான். பின்பு, எலியா பன்னிரண்டு குடம் தண்ணீர் அந்த பலிபீடத்தின்மேல் ஊற்றும்படி ஜனங்களுக்குச் சொன்னான். அதில் பலியிடும் காளை, விறகுகள், மேலும் பலிபீடத்தை சுற்றிலும் நனைந்து போகத்தக்கதாக தண்ணீரை நிரப்பும்படி சொன்னான்.
பின்பு எலியா, யேகோவா, நீர் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர். நீரே இஸ்ரவேலின் தேவன் என்றும் இன்று காண்பித்தருளும், நான் உம்முடைய வேலைக்காரன். நீரே உண்மையான தேவன் என்று இவர்கள் எல்லோரும் அறியும்படி பதில் தாரும் என்று ஜெபித்தான்.
உடனே, வானத்திலிருந்து, தீ வந்து, அந்த பலிபீடத்தின்மேல் இருந்த இறைச்சி, விறகுகள், கற்கள், புழுதி மற்றும் பலிபீடத்தை சுற்றிலும் இருந்த தண்ணீரையும்கூட கருக்கிப் போட்டது. ஜனங்கள் அதைப் பார்த்து, பணிந்து, யேகோவாவே தேவன்! யேகோவாவே தேவன் என்றனர்!
பாகால் தீர்கத்தரிசிகள் ஒருவரையும் தப்பவிடாமல், பிடிக்கும்படி எலியா சொன்னான். ஜனங்கள் பாகாலின் தீர்கத்தரிசிகளை அந்த இடத்திலிருந்து பிடித்துக் கொண்டு போய் அவர்களைக் கொன்று போட்டனர்.
பின்பு எலியா ராஜாவாகிய ஆகாப்பினிடத்தில், சீக்கிரமாய் வீடு திரும்பும், மழை வரப்போகிறது என்றான். உடனே, மேகம் கருத்து, பெருமழை பெய்தது. யேகோவா தேசத்தின் வறட்சியை மாற்றினார். அவரே உண்மையான தேவன் என்று இது விளங்கப் பண்ணினது.
எலியா தன் வேலையை முடித்தவுடன், அவனுடைய ஸ்தானத்தில் எலிசா என்னும் வேறொரு தீர்கத்தரிசியை ஏற்படுத்தினார். எலிசாவைக் கொண்டு தேவன் அநேக அற்புதங்களைச் செய்தார். அதில் நாகமானுக்கு நடத்த ஒரு அற்புதம். நாகமன் படைத் தளபதி ஆனால் அவனுக்கு குஷ்டரோகம் இருந்தது. நாகமான் எலிசாவைப் பற்றி கேள்விப்பட்டு, அவனிடத்தில் போய் தன்னை விடுதலையாக்கும்படி கேட்டான். எலிசா யோர்தான் நதியில் ஏழுமுறை மூழ்கும்படி சொன்னான்.
நாகமான் கோபமடைந்து, அது முட்டாள்தனமாக தோன்றியதினால் அதைச் செய்யவில்லை, ஆனால் திரும்பவும் தன்னுடைய மனதை மாற்றி, யோர்தான் நதியில் ஏழுமுறை மூழ்கினான். அவன் கடைசியாக எழும்பும் போது, தேவன் அவனை குணமாக்கினார்.
தேவன் அநேக தீர்கத்தரிசிகளை இஸ்ரவேலில் அனுப்பினார், அவர்கள் எல்லோரும் விக்ரகங்களை வணங்காதிருக்கும்படி ஜனங்களுக்குச் சொன்னார்கள். மேலும், நியாயமாகவும், தாழ்மையாகவும் இருக்கும்படி ஜனங்களை எச்சரித்தனர். அவர்கள் ஜனங்களை கெட்ட வழியை விட்டுத் திரும்பி, தேவனுக்குக் கீழ்ப்படியும்படி சொன்னார்கள். அப்படிச் செய்யாவிட்டால், தேவன் அவர்களை நியாயந்தீர்த்து, அவர்களைத் தண்டிப்பார் என்று எச்சரித்தனர்.
அவர்கள் மறுபடியும் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், தீர்கத்தரிசிகளை கேவலப்படுத்தி, சிலநேரங்களில் கொலையும் செய்தனர். ஒருமுறை எரேமியா என்னும் தீர்கத்தரிசியை, தண்ணீர் இல்லாத கிணற்றில் மரிக்கும்படி போட்டனர். கிணற்றின் அடியில் இருந்த மண்ணில் புதைந்து போகும் சமயத்தில், அவன் மரிக்கும்முன்னே அவனை கிணற்றிலிருந்து வெளியே எடுக்கும்படி தன் ஊழியக்காரரிடத்தில் கட்டளையிடும்படி ராஜாவினிடத்தில் எரேமியாவுக்கு கிருபைக் கிடைத்தது.
தீர்கத்தரிசிகளை ஜனங்கள் வெறுத்தபோதும் அவர்கள் தேவனுக்காக தொடர்ந்து பேசினர். அவர்கள் பாவங்களை விட்டு மனந்திரும்பா விட்டால் தேவன் அவர்களை அழிப்பார் என்றும், வாக்குபண்ணபட்ட மேசியா வரபோவதையும் அவர்கள் ஜனங்களுக்கு நினைபூட்டினர்.