unfoldingWord 14 - வனாந்திரத்தில் அலைந்துத்திரிதல்
מתווה: Exodus 16-17; Numbers 10-14; 20; 27; Deuteronomy 34
מספר תסריט: 1214
שפה: Tamil
קהל: General
ז׳נר: Bible Stories & Teac
מַטָרָה: Evangelism; Teaching
ציטוט כתבי הקודש: Paraphrase
סטָטוּס: Approved
סקריפטים הם קווים מנחים בסיסיים לתרגום והקלטה לשפות אחרות. יש להתאים אותם לפי הצורך כדי להפוך אותם למובנים ורלוונטיים לכל תרבות ושפה אחרת. מונחים ומושגים מסוימים שבהם נעשה שימוש עשויים להזדקק להסבר נוסף או אפילו להחלפה או להשמיט לחלוטין.
טקסט תסריט
இஸ்ரவேலரோடு தேவன் பண்ணின உடன்படிக்கையினால், தாம் அவர்களுக்குக் கொடுத்த கற்பனைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து நடக்கும்படி சொன்னப்பின்பு, அவர்களை சீனாய் மலையிலிருந்து, அவர்களுக்கு வக்குப்பண்ணப்பட்டதேசமாகிய கானானுக்கு நடத்தினார். அவர் இஸ்ரவேலருக்கு முன்பாக மேகஸ்தம்பத்தினால் அவர்களை நடத்தினார், அவர்கள் பின்தொடர்ந்தனர்.
தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தில் அநேக ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்கள் கானானியர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் தேவனை ஆராதிக்காமல், கீழ்ப்படியாமல், அந்நிய தேவர்களை வணங்கி, தீங்கான காரியங்களைச் செய்தனர்.
இஸ்ரவேலரோடு தேவன், நீங்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசமாகிய கானானுக்குள் பிரவேசித்தப்பின்பு, அவர்களோடு சமாதானம் செய்யாமலும், அவர்களைத் திருமணம் செய்யாமலும், முற்றிலுமாய் சொன்னார். ஏனெனில், நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாமல் அவர்களுடைய அந்நிய தேவர்களை சேவிப்பீர்கள் என்றர்.
இஸ்ரவேலர்கள் கானானின் எல்லையில் வந்தவுடன், மோசே பனிரெண்டு மனிதர்களைத் , அவர்களுக்கு ஆலோசனைக்கொடுத்து, தேசம் எப்படிப்பட்டது, அந்த மனிதர்கள் பலசாலிகளோ அல்லது பலவீனரோ என்று அறியும்படிக்கு கானான் தேசத்தை உளவு பார்க்க அனுப்பினான்.
பனிரெண்டு பெரும் நான்கு நாட்கள் கானான் முழுவதும் சுற்றித்திரிந்து, திரும்பி வந்து. தேசம் விளைச்சல் மிகுந்த பசுமையான தேசம் என்று அறிவித்தனர். அவர்களில் பத்து பேர், அந்த நகரம் மிகவும் வலிமையானது, அதில் இருக்கும் மனிதர்கள் ராட்சதர்களைப் போன்று இருக்கிறார்கள். நாம் அவர்களை நெருங்கினால் நிச்சயமாக நம்மை கொன்றுபோடுவார்கள் என்றனர்.
உடனே காலேப்பும், யோசுவாவும், அந்த மனிதர்கள் உயரமான பலசாலிகள் தான் ஆனால் நாம் அவர்களை வீழ்த்தலாம்! தேவன் நமக்காய் யுத்தம் செய்வார் என்றனர்.
அவர்கள் காலேப்பும், யோசுவாவும் சொன்னதை கேளாமல், ஜனங்கள் கோபமடைந்து, மோசே, ஆரோன் என்பவர்களிடம், ஏன் எங்களை இப்படிப்பட்ட மோசமான இடத்திற்கு கொண்டு வந்தீர்கள்? நாங்கள் எகிப்திலே இருந்திருப்போம், இங்க நாங்கள் யுத்தத்தில் சாவோம், எங்கள் மனைவிகள் பிள்ளைகளை கானானியர் அடிமைகளாக்கிக்கொள்வார்கள் என்றனர். மேலும் அவர்கள் தங்களுக்கு வேறு தலைவரைத் தெரிந்துகொண்டு மறுபடியும் எகிப்துக்குப் போக விரும்பினார்கள்.
ஜனங்கள் இப்படிச் சொன்னபடியால், தேவன் மிகவும் கோபமடைந்து, நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் பிரவேசிப்பதில்லை. நீங்கள் எனக்கு விரோதமாய் கலகம் செய்தபடியினால், உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட யாவரும் வனாந்திரத்தில் அலைந்து திரிய வேண்டும். காலேபும் யோசுவாவும் மட்டும் அதில் பிரவேசிப்பார்கள் என்றார்.
தேவன் இப்படிச் சொன்னதினால் தாங்கள் செய்த செயலுக்கு ஜனங்கள் வருந்தி, கானான் தேசத்தாருடன் சண்டையிடும்படி சென்றார்கள். தேவன் அவர்களுக்கு முன்பாக போவதில்லை என்பதினால் மோசே வேண்டாம் என்று எச்சரித்தான், ஆனால் அவர்கள் அவனுக்குச் செவிகொடுக்கவில்லை.
தேவன் அவர்களோடே போகாததினால், அந்த யுத்தத்தில் இஸ்ரவேலர்கள் தோற்கடிக்கப்பட்டு, அநேக மரித்துப்போயினர். பின்பு அவர்கள் கானானில் இருந்து திரும்பினர். அதன்பின்பு நாற்பது வருடம் வனாந்திரத்தில் அலைந்துத்திரிந்தனர்.
இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் அலைந்துத்திரிந்த நாற்பது வருடமும் தேவன் அவர்களுக்கு வேண்டியதைச் செய்தார். மன்னா என்று அழைக்கப்படும் அப்பத்தை வானத்திலிருந்து வரும்படிச்செய்தார். அவர்கள் இறைச்சி சாப்பிடும்படிக்கு காடைகளை பாளையத்தில் விழும்படிச் செய்தார் (சிறிய பறவைகள் போன்று). அந்த நாற்பது வருடமும் அவர்களுடைய துணியும், செருப்பும் சேதமடையவில்லை.
தேவன் அற்புதமாக பாறையிலிருந்து குடிக்க தண்ணீர் வரும்படிச் செய்தார், ஆனாலும் இஸ்ரவேலர்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாய் பேசினார்கள்.
ஒரு சமயம் ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது, எனவே தேவன் பாறையைப் பார்த்து பேசும்படி மோசேயிடம் சொன்னார், ஆனால் அவன் பேசாமல், தன் கோலினால் அந்த பாறையை அடித்தான். இவ்விதமாக மோசே தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போனான். ஆனாலும் ஜனங்கள் குடிக்கும்படி தண்ணீர் வந்தது. ஆனால் தேவன் மோசேயின்மேல் கோபமடைந்து, நீ வக்குப்பண்ணப்பட்ட தேசமாகிய கானானுக்குள் போவதில்லை என்றார்.
வனாந்திரத்தில் நாற்பது வருடம் அலைந்துத் திரிந்து தேவனுக்கு விரோதமாய் கலகம் செய்த யாவரும் மரித்தப்பின்பு, அவர்களுக்கு வக்குப்பண்ணப்பட்ட தேசமாகிய கானானுக்கு பக்கத்தில் மறுபடியும் அவர்கள் நடத்திச் சென்றார். வயதுஆயிற்று. எனவே யோசுவாவை மோசேக்கு உதவியாய் இருக்கும்படி தேவன் தெரிந்துகொண்டார். அவர்களுக்கு மோசேயைப் போல வேறொரு தீர்க்கத்தரிசி ஏற்படுத்துவதாக முன்னமே மோசேயிடம் தேவன் சொல்லியிருந்தார்.
பின்பு மோசேயை மலையின்மேல் சென்று வக்குப்பண்ணப்பட்ட கானான் தேசத்தைப் பார்க்கும்படி சொன்னார். மோசே அதைப் பார்த்தான், ஆனால் கானானுக்குள் பிரவேசிக்க தேவன் சம்மதிக்கவில்லை. பின்பு மோசே மரித்தான். ஜனங்கள் அவனுக்காக நாற்பது நாள் துக்கமாய் இருந்தனர். யோசுவா தேவனை நம்பி, அவருக்குக் கீழ்ப்படிந்ததினால் அவன் புதிய தலைவன் ஆனான்.