unfoldingWord 20 - அடிமைத்தனத்திலிருந்து திரும்புதல்
Esquema: 2 Kings 17; 24-25; 2 Chronicles 36; Ezra 1-10; Nehemiah 1-13
Número de guión: 1220
Lingua: Tamil
Público: General
Xénero: Bible Stories & Teac
Finalidade: Evangelism; Teaching
Cita biblica: Paraphrase
Estado: Approved
Os guións son pautas básicas para a tradución e a gravación noutros idiomas. Deben adaptarse segundo sexa necesario para facelos comprensibles e relevantes para cada cultura e lingua diferentes. Algúns termos e conceptos utilizados poden necesitar máis explicación ou mesmo substituírse ou omitirse por completo.
Texto de guión
இஸ்ரவேல் தேசமும், யூதா தேசமும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தனர். சீனாய் மலையில் தேவன் அவர்களோடு செய்த உடன்படிக்கையை மறந்தனர். தேவன் அவருடைய தீர்கத்தரிசிகளை அனுப்பி, மனந்திரும்பி அவரை ஆராதிக்கும்படி எச்சரித்தார். ஆனால் அவர்கள் கீழ்ப்படியாமற்போனார்கள்
எனவே தேவன் அந்த இரண்டு தேசத்தையும் அழிக்கும்படி அவர்களுடைய எதிரிகளிடம் ஒப்புக் கொடுத்தார். அசீரியா மிகவும் பலமுள்ள தேசமாயிருந்து, மற்ற தேசங்களுக்கு கொடியராய் இருந்தனர். அவர்கள் வந்து இஸ்ரவேல் தேசத்தை அழித்து, அவர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, அதிலுள்ள அநேகரைக் கொன்று, தேசத்தை போட்டனர்.
எல்லா தலைவர்களையும் அசீரியர்கள் ஒன்று சேர்த்து, பணக்காரர்கள் மற்றும் நன்றாய் வேலை செய்ய அறிந்திருந்த யாவரையும் அசீரியாவுக்கு கொண்டு சென்றனர். மிகவும் ஏழையான ஜனங்கள் சிலர் மட்டுமே இஸ்ரவேலில் இருந்தனர்.
மற்ற தேசத்தாரை அசீரியர்கள் இஸ்ரவேலில் வாழும்படிச் செய்தனர். அவர்கள் நகரத்தை திரும்பவும் கட்டினர். அவர்கள் இஸ்ரவேலில் மீந்திருந்தவர்களைத் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் சந்ததியார் சமாரியர் என்றழைக்கப்பட்டனர்.
நம்பாமல், அவருக்குக் கீழ்ப்படியாமல் போன இஸ்ரவேலை தேவன் எப்படி தண்டித்தார் என்பதை யூதா தேசத்தார் பார்த்தும், தொடர்ந்து கானானின் தெய்வங்களையும் சேர்ந்த விக்ரகங்களை வணங்கினர், தேவன் தம்முடைய தீர்கத்தரிசிகளை அனுப்பி எச்சரித்தும் இஸ்ரவேலர் கேட்கவில்லை.
அசீரியர்கள் இஸ்ரவேலை அழித்து 1௦௦ வருடங்கள் கழித்து, தேவன் நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோனின் ராஜாவை யூதா தேசத்திற்கு விரோதமாய் அனுப்பினார். பாபிலோன் தேசம் மிகவும் பலமுள்ளதாய் இருந்தது. யூதாவின் ராஜா, நேபுகாத்நேச்சாருக்கு வேலை செய்கிறவர்களாய் இருக்க ஒப்புக்கொண்டு, ஒவ்வொரு வருடமும் அதிக பணம் அவர்களுக்குக் கொடுத்தனர்.
ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு யூதாவின் ராஜா, பாபிலோனுக்கு விரோதமாய் எழும்பினான். எனவே பாபிலோனியர் வந்து யூதா தேசத்தை அழித்து, எருசலேம் நகரத்தை சிறைப்பிடித்து, தேவாலயத்தை இடித்து, அதிலுள்ள எல்லா பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டனர்.
நேபுகாத்நேச்சாரின் இராணுவத்தினர் யூதா ராஜாவை தண்டிக்கும்படி, அவன் குமாரர்களை, அவனுடைய கண்களுக்கு முன்பாக வெட்டிப் போட்டு, அவனை குருடாக்கினர். பின்பு அவன் மரிக்கும்படி பாபிலோனின் சிறையில் அடைத்தனர்.
நேபுகாத்நேச்சாரும் அவனுடைய இராணுவமும் ஏறக்குறைய எல்லா யூத ஜனங்களையும் பாபிலோனுக்கு கொண்டு சென்றனர். மிகவும் ஏழையான ஜனங்களில் சிலரை மட்டும் அங்கே விளைச்சலைப் பார்த்துக்க்கொள்ளும்படி விட்டுவிட்டனர். இந்த சமயத்தில் தேவனுடைய ஜனங்கள், வாக்குபண்ணபட்ட தேசத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஜனங்களின் பாவங்களினால் அவர்கள் தண்டித்து, தேசத்தை விட்டுத் துரத்தப்பட்டப் பின்னும், தேவன் அவர்களையும், தாம் வாக்குப்பண்ணினதையும் மறவாமல், தொடர்ந்து தம்முடைய தீர்கத்தரிசிகள் மூலமாக அவர்களோடே பேசி, எழுபது வருடங்களுக்குப்பின் மறுபடியும் அவர்களை வாக்குபண்ணபட்ட தேசத்திற்கு கொண்டு வருவதை சொன்னார்.
எழுபது வருடங்களுக்குப் பின், பெர்சியாவின் ராஜாவாகிய சைரஸ் பாபிலோனை முறியடித்து, அநேக தேசங்களை ஆண்டு வந்தான். அப்போது இஸ்ரவேலர்கள், யூதர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதில் பெரும்பாலான ஜனங்கள் பாபிலோனில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தனர், ஆனால் சில முதியவர்கள் மட்டும் யூதா தேசத்தை நினைத்துக் கொண்டிருந்தனர்.
பெர்சியர் பலமுள்ளவர்களாயிருந்தும், தாங்கள் சிறைப்பிடித்திருந்த ஜனங்கள்மேல் தயவாய் இருந்தனர். சைரஸ் பெர்சியாவின் ராஜாவானபோது, யூதர்கள், பெர்சியா தேசத்தைவிட்டு போக விரும்பினால் அவர்கள் போகலாம் என்று ராஜாவினால் கட்டளைப்பிறந்ததும். எழுபது வருடங்களுக்குப் பிறகு, கொஞ்ச ஜனங்களே இருந்தபடியால் அவர்கள் யூதா தேசத்திற்கு திரும்பினர், தேவாலயத்தைக் மறுபடியும் கட்டும்படி பணமும் கொடுத்தான்.
ஜனங்கள் எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தையும், நகரத்தின் சுவர்களையும் கட்டினர். பெர்சியர் அவர்களை ஆண்டபோதும், அவர்கள் திரும்பவும் வாக்குபண்ணபட்ட தேசத்தில் குடியேறி, தேவாலயத்தில் தேவனை ஆராதித்தனர்.