unfoldingWord 21 - தேவன் மேசியாவை வாக்குப்பண்ணுதல்
Císlo skriptu: 1221
Jazyk: Tamil
Publikum: General
Úcel: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
Postavení: Approved
Skripty jsou základní pokyny pro preklad a nahrávání do jiných jazyku. Mely by být podle potreby prizpusobeny, aby byly srozumitelné a relevantní pro každou odlišnou kulturu a jazyk. Nekteré použité termíny a koncepty mohou vyžadovat více vysvetlení nebo mohou být dokonce nahrazeny nebo zcela vynechány.
Text skriptu
தேவன் உலகத்தை உண்டாக்கும்போதே காலங்களுக்குப் பிறகு மேசியாவை இவ்வுலகத்திற்கு அனுப்பப் போவதை அறிந்திருந்தார். அதை தேவன் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் முன்னமே சொல்லியிருந்தார். அதாவது, உன்னுடைய சந்ததியில் பிறக்கிறவர் பாம்பின் தலையை நசுக்குவார் என்றார். பாம்பு என்பது ஏவாளை வஞ்சித்த சாத்தான். தேவன் சொன்ன அந்த மேசியா தான் சாத்தானை முற்றிலுமாய் ஜெயிக்கப் போகிறவர்.
தேவன் ஆபிரகாமிடம், அவன் மூலமாய் முழு உலகையும் ஆசீர்வதிப்பேன் என்று வாக்குப் பண்ணியிருந்தார். தேவன் ஆபிரகாமிடம் சொன்னதை நிறைவேற்ற, மேசியாவை இவ்வுலகத்திற்கு அனுப்பி, இந்த உலகத்திலுள்ள எல்லோருடைய பாவங்களையும் அவர் நீக்குவார்.
தேவன் மோசேயிடம், அவனைப்போல ஒரு தீர்கத்தரிசியை அனுப்புவேன் என்று வாக்குப் பண்ணியிருந்தார். மறுபடியும் தாம் வாக்குப்பண்ணின, அந்த தீர்கத்தரிசி மேசியா தான்
தேவன், தாவீதிடம் அவனுடைய சந்ததியில் மேசியா வருவார் என்று வாக்குப்பண்ணியிருந்தார். அவரே ராஜாவயிருந்து, தேவஜனத்தை என்றென்றும் ஆட்சி செய்வார்.
தேவன், எரேமியாவினிடத்தில், ஒரு புதிய உடன்படிக்கையை தாம் ஒருநாள் செய்யப்போவதாக சொன்னார். அந்த உடன்படிக்கை, முன்பு இஸ்ரவேலிடம், சீனாய் மலையில் செய்ததுபோல இல்லாமல், அவரை தனிப்பட்ட முறையில் அறியவும், நேசிக்கவும், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் செய்யும் புதிய உடன்படிக்கை. அந்தக் கட்டளைகள் ஜனங்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டது போலிருக்கும். அவர்கள் அவருடைய ஜனமாயிருப்பார்கள். அவர் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பார். அந்த புதிய உடன்படிக்கையை ஜனங்களோடு ஏற்படுத்துவது மேசியா தான்.
அந்த மேசியா, தீர்கத்தரிசியும், ஆசாரியனும், ராஜாவுமாயிருப்பார். ஒரு தீர்கத்தரிசி என்பவன், தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு, ஜனங்களுக்கு தெரிவிப்பான். அப்படியே, இந்த மேசியா, தேவனுடைய வார்த்தைகளை முழுமையாகக் கேட்டு, புரிந்துகொண்டு, அவைகளை ஜனங்களுக்கு முழுமையாக தெரிவிப்பார்.
இஸ்ரவேலின் ஆசாரியர்கள், ஜனங்களுக்காக தேவனிடத்தில் பலி . . மேலும் ஆசாரியர்கள் ஜனங்களுக்காக தேவனிடத்தில் ஜெபிப்பார்கள். அதுபோல, மேசியாவும் பிரதான ஆசாரியர், ஏனெனில் அவர் தம்மையே பூரண பலியாக தேவனிடத்தில் ஒப்புக்கொடுப்பார். அவர் பாவம் செய்யாததினால், அவர் தம்மை பலியாக ஒப்புக்கொடுக்கும் போது, பாவங்களைப் நீக்க வேறொரு பலி அவசியம் இல்லை.
ராஜாக்களும், தலைவர்களும் ஜனங்களை ஆளும்போது, தவறு செய்வார்கள். தாவீது ராஜா இஸ்ரவேலில் மட்டுமே ஆட்சி செய்தான், ஆனால் தாவீதின் சந்ததியில் வரும் மேசியா, முழு உலகத்தையும் என்றென்றைக்கும் ஆட்சி செய்வார். அவர் ஜனங்களை நீதியோடு நடத்தி, சரியான முடிவுகளை எடுப்பார்.
தேவனுடைய தீர்கத்தரிசிகள் மேசியாவைப் பற்றி அநேகக் காரியங்களை சொன்னார்கள். உதாரணமாக, மேசியா வருவதற்கு முன்பு ஒரு தீர்கத்தரிசி வருவான். அந்தத் தீர்கத்தரிசி மிகவும் முக்கியமானவன் என்று மல்கியா சொன்னான். மேலும் அந்த மேசியா ஒரு கன்னிகையின் வயிற்றில் பிறப்பார் என்று ஏசாயா சொன்னான். மற்றும் மேசியா என்பவர் பெத்லகேம் என்னும் ஊரிலே பிறப்பார் என்று மீகா சொன்னான்.
மேசியா கலிலேயா என்னும் ஊரிலே இருப்பார் என்று ஏசாயா சொன்னான். அந்த மேசியா மிகவும் வேதனைப்படுகிறவர்களை தேற்றுவார், காவலில் இருக்கிறவர்களை விடுவிப்பார், மேலும் அந்த மேசியா வியாதியாய் பேசமுடியாமல், நடக்கமுடியாமல், பார்க்கமுடியாமல், மற்றும் கேட்கமுடியாமல் இருப்பவர்களை குணமாக்குவார்.
ஜனங்கள் மேசியாவை வெறுத்து, அவரை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று ஏசாயா தீர்கத்தரிசி சொன்னா. மேசியாவின் நண்பன் அவருக்கு விரோதமாய் திரும்புவான் என்று வேறொரு தீர்கத்தரிசி சொன்னா. அவன் அந்த செயலுக்காக முப்பது வெள்ளிக்காசை ஜனங்களிடமிருந்து பெறுவான் என்று சகரியா தீர்கத்தரிசி சொன்னா. மேலும், மேசியாவை ஜனங்கள் கொலை செய்து, அவருடைய உடையின் பேரில் சீட்டுப் போடுவார்கள் என்று அநேக தீர்கத்தரிசிகள் சொன்னார்கள்.
மேசியா எப்படி மரிப்பார் என்றும் அநேக தீர்கத்தரிசிகள் சொன்னார்கள். அவர் எந்த தவறும் செய்யாதிருந்தும், மேசியாவை அடிக்கவும், அவர்மேல் துப்பவும், அவரை கிண்டல் செய்யவும், ஈட்டியால் குத்தவும், அவரை துன்பப்படுத்தி, தாங்கமுடியாத கொடுமை செய்வார்கள் என்று ஏசாயா தீர்கத்தரிசி சொன்னா.
மேசியா பாவம் செய்யாமல் பரிசுத்தமாயிருப்பார். ஆனால் ஜனங்களின் பாவங்களுக்காக தேவன் அவரை தண்டிப்பார். அவர் மரிக்கும்போது, ஜனங்கள் தேவனோடு சமாதானமாவதற்கு ஏதுவாக மேசியா மரிப்பார் என்றும் தீர்கத்தரிசிகள் சொன்னார்கள்.
தேவன், மேசியாவை மரணத்திலிருந்து எழுப்புவார் என்று தீர்கத்தரிசிகள் சொன்னார்கள். இதனால் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்த ஜனங்களுடன், புதிய உடன்படிக்கை செய்யும்படியான தேவனுடைய திட்டம் தான் இவை எல்லாம்.
தேவன், அநேகக் காரியங்கள் மேசியாவை குறித்து, தீர்கத்தரிசிகளிடம் சொன்னார். இந்தத் தீர்கத்தரிசிகளின் நாட்களில் மேசியா வரவில்லை. தீர்கத்தரிசனங்கள் சொல்லப்பட்டு, 4௦௦ வருடங்களுக்கு மேல், தேவனின் சரியான நேரத்தில் மேசியா இவ்வுலகத்திற்கு வந்தார்.