unfoldingWord 01 - படைப்பு
Esquema: Genesis 1-2
Número de guió: 1201
Llenguatge: Tamil
Tema: Bible timeline (Creation)
Públic: General
Propòsit: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
Estat: Approved
Els scripts són pautes bàsiques per a la traducció i l'enregistrament a altres idiomes. S'han d'adaptar segons sigui necessari perquè siguin comprensibles i rellevants per a cada cultura i llengua diferents. Alguns termes i conceptes utilitzats poden necessitar més explicació o fins i tot substituir-se o ometre completament.
Text del guió
தேவன் ஆதியிலே எல்லாவற்றையும் படைத்தார். அவர் உலகம் முழுவதையும் ஆறு நாளில் . தேவன் பூமியை உருவக்கினபின்பு அது இருளும் வெறுமையுமாய் இருந்தது, ஏனெனில் உலகில் எதையும் உண்டாக்கவில்லை, ஆனால் தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
பின்பு தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார் உடனே வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சத்தை தேவன் நல்லதென்று கண்டார் எனவே அதை பகல் என்று , இருளினின்று விலக்கி. முதலாம் நாளில் தேவன் வெளிச்சத்தை உண்டாக்கினார்.
படைப்பின் இரண்டாம் நாளில், தேவன்:ஜலத்தின்மேல் ஆகாயம் உண்டாகக்கடவது அப்படியே ஆயிற்று. அதை வானம் என்று அழைத்தார்.
மூன்றாம் நாளில், தேவன்: ஜலம் முழுவதும் ஒன்று சேர்ந்து வெட்டாந்தரை உண்டாகக்கடவது என்றார். அந்த வெட்டாந்தரையை பூமி தண்ணீரை "கடல்" அழைத்தார். பின்பு அது நல்லதென்று கண்டார்.
பின்பு தேவன்: இந்த பூமி சகலவிதமான மரங்களையும், செடிகளையும் என்றார். அப்படியே ஆயிற்று. தேவன் அது நல்லதென்று கண்டார்.
படைப்பின் நான்காம் நாளில், தேவன்: வானத்தில்உண்டாகக் கடவது என்றார். பின்பு சூரியன்,சந்திரன்மற்றும் நட்சத்திரங்கள் உண்டாயிற்று. காலங்களையும், வருடங்களையும் அறிய வெளிச்சம் தரும்படிக்கும், பகல் மற்றும் இரவு என்பதை அறியவும் இவ்வாறு செய்தார். தேவன் அது நல்லதென்று கண்டார்.
ஐந்தாம் நாளில், தேவன்:ஜலத்தில் ஜீவ ஜந்துக்களையும், வானில் பறக்கும் பறவைகளையும் உண்டாக்கினார். இவ்விதமாக தேவன் ஜலத்தில் நீந்தும் ஜீவ ஜந்துக்களையும், வானில் பறக்கும் பறவைகளையும் உண்டாக்கினார். தேவன் அது நல்லதென்று கண்டார்.
சிரிஷ்ட்டிப்பின் ஆறாம் நாளில், தேவன்: எல்லாவிதமான விலங்குகளும் உண்டாகும்படி கட்டளையிட்டார், அவர் சொன்னபடியே ஆயிற்று. அதில் காட்டுமிருகங்களும், நாட்டுமிருகங்களும், ஊரும்பிராணிகளும் அடங்கும். அதை தேவன் நல்லதென்று கண்டார்.
பின்பு தேவன்: நமது சாயலாக மனிதனை உண்டாக்குவோம் என்றார். அவர்கள், பூமியையும், எல்லா மிருக ஜீவன்களையும் ஆளக்கடவர்கள் என்றார்.
பின்பு தேவன் சிறிதளவு மண்ணினாலே மனிதனை படைத்து, நாசியில் சுவாசத்தை அவனுக்குள் ஊதினார். அந்த மனிதனின் பெயர் ஆதாம். தேவன் ஆதாம் வாழும்படிக்கு ஒரு பெரிய தோட்டத்தை உண்டாக்கி அதை கவனித்துக் கொள்ளும்படி செய்தார்.
தோட்டத்தின் நடுவில், தேவன் இரண்டு விஷேச மரங்களை முளைக்கும்படி செய்தார் அது ஜீவ விருட்சத்தையும், நன்மை தீமை அறியதத்தக்க விருட்சமுமாயிருந்தது. தேவன் ஆதாமினிடத்தில்: நீ இந்த தோட்டத்தில் உள்ள நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை மாத்திரம் புசிக்க வேண்டாம் அப்படி புசித்தால் நீ சாவாய் என்று கூறினார்.
பின்பு தேவன் கூறியது, மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்றும், ஆதாமின் துணையாளராக இருக்க இயலாது என்றார்.
எனவே தேவன் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரை வரப்பண்ணி, பின்னர் தேவன் ஆதாமின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து ஒரு பெண்ணை உண்டாக்கி அவளை, அவனிடத்தில் கொண்டு வந்தார்.
ஆதாம் அவளைக் கண்டபோது, அவன்: இவள் என்னைப்போல இருக்கிறாள்! இவள் மனுஷி எனப்படுவாள் என்றான். அவள் மனுஷனில் எடுக்கப்பட்டாள். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும், தன் தாயையும் விட்டு தன் மனைவியோடு இசைந்திருக்ககடவன்,
தேவன், மனுஷனையும், மனுஷியையும் தமது சாயலில் உண்டாக்கினார். அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை நோக்கி: நீங்கள் அநேக பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பெற்று பூமியை நிரப்புங்கள் என்றார்! தேவன் தாம் படைத்த எல்லாவற்றையும் கண்டார், அவை எல்லாம் நல்லதென்று கண்டார். இவையெல்லாம் ஆறு
ஏழாம் நாளில், தேவன் தாம் செய்து கொண்டிருந்த எல்லா வேலைகளையும் முடித்து, அந்த நாளை ஆசீர்வதித்து, அதை பரிசுத்தமாக்கி, அந்நாளில் ஓய்ந்திருந்தார். இவ்விதமாக தேவன் உலகம்முழுவதையும் படைத்தார்.