unfoldingWord 06 - தேவன் ஈசாக்குக்குக் கொடுத்தார்
রূপরেখা: Genesis 24:1-25:26
লিপি নম্বর: 1206
ভাষা: Tamil
শ্রোতা: General
উদ্দেশ্য: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
সামাজিক মর্যাদা: Approved
অন্যান্য ভাষায় অনুবাদ এবং রেকর্ড করার জন্য স্ক্রিপ্টগুলি মৌলিক নির্দেশিকা। প্রতিটি ভিন্ন সংস্কৃতি এবং ভাষার জন্য তাদের বোঝার জন্য এবং প্রাসঙ্গিক করে তোলার জন্য তাদের প্রয়োজনীয় হিসাবে উপযোগী করা উচিত। ব্যবহৃত কিছু শর্তাবলী এবং ধারণাগুলির আরও ব্যাখ্যার প্রয়োজন হতে পারে বা এমনকি সম্পূর্ণরূপে প্রতিস্থাপন বা বাদ দেওয়া যেতে পারে।
লিপি লেখা
ஆபிரகாம் முதிர் வயதானபோது, ஈசாக்கும் வளர்ந்து பெரியவனானான். ஆபிரகாம் தன் வேலைக்காரனை தன்னுடைய சொந்தக்காரர்கள் குடியிருக்கும் தேசத்திற்கு அனுப்பி தன்னுடைய குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் பார்க்கும்படி அனுப்பினான்.
வெகு தூரமான ஆபிரகாமின் சொந்தக்காரர்கள் வசிக்கும் தேசம் வந்தபோது, ஆபிரகாமுடைய சகோதரனுடைய மகள் ரெபெக்காள் என்பவளிடத்திற்கு தேவன் அந்த வேலைக்காரனை நடத்தினார்.
தன்னுடைய குடும்பத்தாரை விட்டு அவர்களோடே ஈசா வீட்டிற்குப் போகும்படி ரெபெக்காள் முடிவுசெய்து, அங்கே சேர்ந்ததும் ஈசாக்கை திருமணம் செய்தாள்.
அநேக நாட்களுக்குப்பின் ஆபிரகாம் மரித்தான். பின்பு தேவன் அவனுடைய குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார் ஏனெனில் ஆபிரகாமுடன் தேவன் உடன்படிக்கை செய்திருந்தார். தேவனுடைய வாக்குத்தத்தங்களில் ஆபிரகாமின் சந்ததி எண்ணமுடியாத அளவு பெருகும் என்பது ஆனால் ஈசாக்கின் மனைவி ரெபெக்காள் பிள்ளையில்லாதிருந்தாள்.
ஈசாக்கு ரெபெக்காவுக்காக ஜெபித்தான், ரெபெக்காள் கருவுற்று இரட்டை குழந்தைகள் கருவுறும்படி செய்தார். அந்த இரண்டு குழந்தைகளும் ரெபெக்காளின் கருவுக்குள் இருக்கும்போது மோதிக்கொண்டனர், எனவே அவள் அதை தேவனிடம் கேட்டாள்.
உனக்குப் பிறக்கும் இரண்டு குழந்தைகளும் இரண்டு ஜனங்கள். அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்று தேவன் சொன்னார்.
ரெபெக்காளுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தபோது, மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் உடலெல்லாம் ரோம அங்கி போர்த்தவன் போல பிறந்தான். அவனுக்கு ஏசா என்றும், பின்பு அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிகாலைப் பிடித்துக்கொண்டு பிறந்ததினால், அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்.