unfoldingWord 17 - தாவீதுடன் தேவனின் உடன்படிக்கை
إستعراض: 1 Samuel 10; 15-19; 24; 31; 2 Samuel 5; 7; 11-12
رقم النص: 1217
لغة: Tamil
الجماهير: General
الغرض: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
حالة: Approved
هذا النص هو دليل أساسى للترجمة والتسجيلات فى لغات مختلفة. و هو يجب ان يعدل ليتوائم مع اللغات و الثقافات المختلفة لكى ما تتناسب مع المنطقة التى يستعمل بها. قد تحتاج بعض المصطلحات والأفكار المستخدمة إلى شرح كامل أو قد يتم حذفها فى ثقافات مختلفة.
النص
சவுல் என்பவன் இஸ்ரவேலின் முதல் ராஜா. அவன் மிகவும் சவுந்தரியமும், உயரமுமானவன். சவுல் முதல் சில வருடங்கள் ஜனங்கள் விரும்பியபடியே நன்றாய் ஜனங்களை ஆண்டான். ஆனால் பின்பு தேவனுக்குக் கீழ்படியாமல், பாவம் செய்தான் எனவே தேவன் அவனுடைய ஸ்தானத்தில் வேறொருவனை ராஜாவாக .
தாவீது என்று அழைக்கப்படும் ஒரு வாலிபனை தேவன் தெரிந்து கொண்டு, சவுலுக்குப் பின் அவனை ராஜாவாக்கும்படி ஆயத்தப்படுத்தினார். பெத்லகேம் என்னும் ஊரில் தாவீது ஒரு ஆட்டு மேய்ப்பனாயிருந்தான். ஒரு சமயம் தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது வந்த ஒரு சிங்கத்தையும், ஒரு கரடியையும் கொன்று போட்டான். தாவீது தாழ்மையாயும், உத்தமமாயும், தேவனை நம்பி, கீழ்ப்படிந்திருந்தான்.
தாவீது வாலிபனாய் இருந்த போது, அரக்கன் கோலியாத்திடம் சண்டை போட்டு அவனை தோற்கடித்தான். கோலியாத் மூன்று மீட்டர் உயரமும், பலசாலியும், நன்றாய் சண்டை பண்ணுகிறவனுமாயிருந்தான்!! ஆனால் தாவீது, கோலியாத்தைக் கொன்று, இஸ்ரவேலருக்கு ஜெயம் பெற்றுத் தரும்படி தேவன் அவனுக்கு உதவி செய்தார். அதன் பின்பு தாவீது அநேக யுத்தங்களில் வெற்றி பெற்றான். அவன் நன்றாய் யுத்தம் செய்கிறவனாய், இஸ்ரவேலின் இராணுவத்தை நடத்தினான். அதினால் ஜனங்கள் தாவீதை புகழ்ந்தனர்.
ஜனங்கள் சவுலைப்பார்க்கிலும் தாவீதை அதிகம் நேசித்ததினால், ராஜாவாகிய சவுல் அவனைக் கொல்லும்படி நினைத்தான். எனவே தாவீது வனாந்திரத்தில் ஒளிந்து கொள்ளும்படி, தன்னுடன் இருந்த யுத்த வீரர்களுடன் ஓடிப் போனான். ஒரு நாள் சவுலும், அவனுடைய வீரர்களும், தாவீது இருந்த அதே குகைக்குள் பிரவேசித்தனர். ஆனால் அவர்கள் தாவீதை பார்க்கவில்லை. அவன் ஒளிந்து கொண்டிருந்தான். தாவீது சவுலின் அருகில் சென்று அவனுடைய சால்வையின் ஒரு பகுதியை வெட்டி எடுத்துக் கொண்டான். பின்பு அவன் சவுலை நோக்கி, உம்முடைய சால்வையின் சிறு பகுதி என்றான். அப்படி அவன் செய்ததினால், சவுலைக் கொன்று போட்டு தான் ராஜாவாக விரும்பவில்லை என்பதை அவனுக்கு உணர்த்தினான்.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, சவுல் யுத்தத்தில் மரித்தான், அதன் பின்பு தாவீது இஸ்ரவேலில் ராஜாவானான். அவன் நல்ல ராஜாவாயிருந்தான், ஜனங்களும் அவனை நேசித்தனர். தேவன் தாவீதை ஆசீர்வதித்து, அவனுக்கு ஜெயத்தைத் தந்தார். அவன் சென்ற அநேக யுத்தங்களில் இஸ்ரவேலருடைய விரோதிகளை ஜெயிக்கும்படி தேவன் தாவீதுக்கு உதவி செய்தார். அவன் எருசலேமை பிடித்து, அதை தன் தலைநகராக்கினான், அங்கே தான் அவன் வாழ்ந்து, ஆட்சி செய்தான். தாவீது நாற்பது வயதானபோது இஸ்ரவேல் தேசம் வலிமையையும், செழிப்பையும் பெற்றிருந்தது.
மோசேயின் காலத்தில் செய்யப்பட்டு, 4௦௦ வருடங்களாக இருந்த ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேலர்கள் தேவனுக்கு ஆராதனை செய்து, பலி செலுத்தி வந்ததினால், தாவீது தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று விரும்பினான்.
ஆனால் நாத்தான் என்னும் தீர்க்கத்தரிசியை தாவீதிடம் தேவன் அனுப்பி, நீ அநேக யுத்தங்களை செய்ததினால் நீ அல்ல, உன் குமாரனே எனக்கு ஆலயத்தைக் கட்டுவான், ஆயினும், நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததி இஸ்ரவேலை ஆளும் என்று சொன்னார்! தாவீதின் சந்ததியில் என்றென்றைக்கும் ஆளுகிறவர் மேசியா. தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அந்த மேசியாவே உலகத்தின் ஜனங்களின் பாவங்களை போக்குகிறவர்.
நாத்தான் சொன்னதை தாவீது கேட்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, துதித்தான். ஆனால் எப்போது இதை தேவன் செய்வார் என்று தாவீதுக்கு தெரியவில்லை. இப்போது நாம் அறிந்தபடி, ஏறக்குறைய மேசியா வருவதற்கு 1௦௦௦ வருடங்கள் வரை இஸ்ரவேலர்கள் காத்திருக்க வேண்டும் என்று. தொடர்ந்து தேவன் தாவீதை மேன்மைப்படுத்தி, அநேகத்தினால் ஆசீர்வதித்தார்.
அநேக வருடங்கள் தாவீது ஜனங்க நியாயமாய் நடத்தினான். அவன் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததினால், தேவன் அவனை ஆசீர்வதித்தார். பின்பு தேவனுக்கு விரோதமாய் கொடிய பாவம் செய்தான்.
ஒரு நாள் தன் அரண்மனையிலிருந்து ஒரு அழகான பெண் குளிப்பதை தாவீது பார்த்தான். அவளை அவனுக்குத் தெரியாது, ஆனால் அவள் பெயர் பத்சேபாள் என்று அறிந்து கொண்டான்.
அதை விட்டுவிடாமல், தாவீது அவளை அழைத்து வரும்படிச் சொல்லி, அவளோடு விபச்சாரம் செய்ததுவிட்டு, அவளைத் திரும்பவும் வீட்டிற்கு அனுப்பி விட்டான். சில காலத்திற்கு பின்பு, அவள் கற்பமாய் இருப்பதாக தாவீதுக்கு செய்தியை அனுப்பினாள்.
பத்சேபாளின் கணவர் பெயர் உரியா. அவன் தாவீதின் இராணுவத்தில் முதன்மையான சேவகனாகயிருந்தான். அந்த சமயத்தில் அவன் யுத்தத்தில் இருந்தான். உரியாவை தாவீது அழைத்து, அவனுடைய மனைவியுடன் இருக்கும்படி அனுப்பினான், ஆனால் மற்றவர்கள் எல்லோரும் யுத்தத்தில் இருக்கும்போது உரியா வீட்டிற்கு போகவில்லை எனவே தாவீது, அவனைத் திரும்பவும் யுத்தத்திற்கு அனுப்பி, யுத்தத்தில் எதிரிகள் அவனைக் கொன்று போடும் இடத்தில் நிறுத்தும்படி அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டான். அப்படி செய்ததினால் உரியா யுத்தத்தில் மரித்தான்.
உரியா மரித்தப் பின்பு, பத்சேபாளை தாவீது திருமணம் செய்தான், அவள் அவனுக்கு ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தாள். தாவீதின் செய்கையினால் தேவன் மிகவும் கோபமடைந்து, தீர்க்கதரிசியான நாத்தானை அனுப்பி எப்படிப்பட்ட தவறை அவன் செய்தான் என்று சொல்லச் சொன்னார். பின்பு தாவீது மதிரும்பினான், தேவன் அவனை மன்னித்தார். தாவீது தன் வாழ்நாளெல்லாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, கடினமான நேரங்களிலும், அவருடைய வழியில் நடந்தான்.
ஆனாலும் தாவீதின் பிள்ளை மரித்தது. தேவன் அவனை இப்படியாய் தண்டித்தார். மேலும் அவனுடைய சொந்த ஜனம் அவனுக்கு விரோதமாய் யுத்தம் செய்தனர். அவனுடைய பலம் எல்லாம் போயிற்று. தாவீது தேவனுக்கு விரோதமான பாவம் செய்தபோதும், தேவன் அவனுக்கு வாக்குப் பண்ணினதை செய்ய நிதியுள்ளவராயிருந்தார். தாவீதுக்கும், பத்சேபாளுக்கும் ஒரு ஆண் குழந்தையை தந்தார். அவன் பெயர் சாலமன்.