நாங்கள் என்ன பதிவு செய்கிறோம்

மொழியினால் கலாச்சாரத்தினால் வேறுபட்ட மக்களுக்கு குறிப்பாக சிறிய தனிமைப்படுத்தப்பட்ட ஆதாரவளம் குன்றினவர்களுக்கும் தேவனுடைய சத்தியத்தை தெளிவாகவும் பிழையின்றி துல்லியமாக அறிவிப்பதை GRN தங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளனர். இதை செய்வதற்கு ஒரு தொடராக ஆடியோமற்றும்ஆடியோக்காட்சிஇவற்றை மூல பொருட்களாக தயார் செய்கின்றனர்.

ஆடியோ மட்டுமே என்கின்ற திட்டங்கள் பல்வேறு விதமான அம்சங்களை கொண்டுள்ளது. உள்ளூர் கலாச்சாரம், மக்களின் தேவைகள், மற்றும் கிடைக்கப்பெறும் உதவிகள் இவற்றை பொறுத்து கீழ்வரும் துணைப்பொருட்கள் திட்டங்களில் பயன் படுத்தப்படுகின்றது.

பாடல்கள்: பெரும்பான்மையான கலாச்சரங்களில் பாடுவதற்கு விரும்புகின்றனர். பாடங்களை விட பாடல்களை நினைவில் கொள்வது சுலபமாக இருக்கும். சுவிதேஷ நற்செய்தி உள்ளூர் பாடல்கள் வாயிலாக அறிவிக்கப்படும்போது அது பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, உள்ளூர் பாணியில் உள்ளூர் இசையில் இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலை பற்றி கேட்டமாத்திரத்தில் அங்கு மில்னே பே இடத்தில் PNG சிறிய மொழிபேசும் குழுவில் இருந்த ஒரு மனிதன்," "மிஷனரிகள் இது போலவே ஆரம்பத்திலேயே எங்களுக்கு நற்செய்தி கொண்டு வந்திருந்தால் இதன் பலன் மிகவும் அதிகமாக இருந்திருக்கும்" என்று சொன்னார்.

வேதாகமம்: எங்கே வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறதோ அது வேதாகமத்தை ஒலிப்பதிவு செய்வதற்கு ஒரு பெரிய ஆசீர்வாதமாக செயல்பட்டு மக்களுக்கு உதவ முடியும். இந்த திட்டங்கள் வேதத்தில் உள்ள முழு "புத்தகங்களும்", தேர்வு செய்யப்பட்டவைகளும், வாசகர்கள் எளிதாக படிக்கத்தக்க பதிப்பும், இன்னும் இதுபோல உள்ள மற்ற பொருட்களும் அடங்கும்.

நற்சாட்சியம் மரணத்தில் இருந்து மீண்டு புது வாழ்வுக்கு பயணம் செய்துள்ள ஒரு உள்ளூர் நபரின் கதை ஒரு ஆழ்ந்த விளைவை ஏற்படுத்தியுள்ளது.

கவிதைகள் மற்றும் நீதிமொழிகள் அநேக கலாச்சாரங்களில் இவற்றிற்கு உயர்ந்த மதிப்பு உள்ளது. உள்ளூரில் திறமைவாய்ந்த உதவியாளர்கள் கிடைப்பின் வேதாகம சத்தியத்தை இந்த படிவங்களில் இருதயங்களுக்கு வெளிப்படுத்துவது ஆற்றல் மிகுந்ததாக இருக்கும்.

நாடகங்கள், உரையாடல், மற்றும் வினாக்களும் விடைகளும் ஒரு நல்ல விளைவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

எங்களின் அநேக ஆடியோ மட்டுமே என்கின்ற நிகழ்ச்சிநிரல் பொதுவான பெயரை கொண்டுள்ளது. "வாழ்வு தரும் வார்தைகள்". இவைகள் மேலேயுள்ள கூறுகள் சிலவற்றை கொண்டிருக்கலாம் ஆனால் மூலக்கூறுகளாக href="/ta/scripts"> நூலக உரைகளையும் சுருக்கமாக கூறப்பட்ட வேதாகம கதைகளும் மற்றும் வேதாகம செய்திகளையும் கொண்டுள்ளது.

  • Select from a range of programs in 6467 language varieties.

தொடர்புடைய தகவல்கள்

கதைசொல்லல் ஏன்? - காலகாலமாகவே தொடர்பு கொள்ளுவதற்கு கதை சொல்லல் என்பது மிகவும் ஆற்றல் மிக்க ஒரு வழியாக இருந்து வருகிறது.

ஊழியத்தின் செயல்முறை - GRN உலகமெங்கும் உள்ள எல்லா நாடுகளுக்கும் அருட்பணி ஒளிப்பதிவாளர்களைப் பயிற்றுவித்து நியமிக்கிறது.எந்த கிராமமும் அணுக முடியாத தொலைவிலும் இல்லை. எம்மொழியும் புரிந்து கொள்ளவே முடியாததும் இல்லை.

GRN ஐ பற்றி - உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் இல்லாத இடங்கள் மற்றும் மக்கள் செல்லக்கூடிய உள்ளூர் தேவாலயங்கள் சபைகள் இல்லாத இடங்கள் அல்லது எழுதப்பட்ட வேதமோ வேதப்பகுதிகளோ கிடைத்தாலும் அவற்றைப் படிக்கவோ புரிந்துகொள்ளவோ கூடிய மக்கள் ஒருசிலரே இருக்கும் இடங்கள், இப்படிப்பட்ட இடங்களில் பணியாற்றுவதே எங்களுக்கு பேரார்வம்.